Home நாடு சயாம் மரண இரயில்வே- இழப்பீடு எங்கே? கேள்வி எழுப்புகிறார் இராமசாமி!

சயாம் மரண இரயில்வே- இழப்பீடு எங்கே? கேள்வி எழுப்புகிறார் இராமசாமி!

941
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் :இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்காசியாவின் பெரும்பகுதியை ஜப்பான் இராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து தான் கைப்பற்றிய எல்லா நாடுகளையும் இரயில் போக்குவரத்து மூலம் இணைப்பதற்காக பர்மா-தாய்லாந்து எல்லையில் இரயில் பாதை ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டது.

சயாம் மரண ரயில்வே என அந்த திட்டம் அழைக்கப்பட்டது. அந்த இரயில் பாதையை நிர்மாணிப்பதற்காக ஆயிரக்கணக்கில் மலாயாவிலிருந்து தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களாவர்.

#TamilSchoolmychoice

நீண்ட காலமாக சர்ச்சையாக இருந்துவரும் இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளார் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி. சயாம் மரண இரயில்வே திட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 90 ஆயிரம் பேரில் மரணமடைந்த சுமார் 30 ஆயிரம் மலேசியர்களுக்கு நஷ்ட ஈடாக 207 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியதாகவும் அந்தப் பணம் என்னவாயிற்று எனவும் இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு இந்த விவகாரம் நன்கு தெரியும் என்றும் அவர் முன்வந்து இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் இராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீட்டை ஜப்பானிய அரசாங்கம் பணமாகக் கொடுத்ததா அல்லது திட்டங்களுக்கான சலுகைகள் அடிப்படையில் கொடுக்கப்பட்டதா என்பதையும் மகாதீர் விளக்க வேண்டும் என்றும் அப்படி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்றால் அவை எந்தத் திட்டங்கள் என்பது குறித்து விளக்க வேண்டும் எனவும் இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.