Home நாடு “நாட்டின் முடிவு இனி மாமன்னர் கரங்களில்” – துன் மகாதீர் கூறுகிறார்.

“நாட்டின் முடிவு இனி மாமன்னர் கரங்களில்” – துன் மகாதீர் கூறுகிறார்.

878
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதால் அவர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டித் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மற்ற எதிர்க்கட்சித் தரப்புகளைப் போன்று துன் மகாதீரும் அறைகூவல் விடுத்துள்ளார்.

இனி நாட்டின் அரசியல் முடிவு மாமன்னர் கரங்களில்தான் இருக்கிறது என்றும் மகாதீர் கூறியுள்ளார்.

“இதுபோன்ற அரசியல் நெருக்கடிகளில் பொதுத் தேர்தல்தான் சிறந்த வழி, ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையால் அடுத்த பிரதமர் யார் என்பதையும் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதையும் மாமன்னர்தான் முடிவு செய்வார். நான் பதவி விலகியபோது என்னை இடைக்காலப் பிரதமராக மாமன்னர் நியமித்ததைப் போன்று, இப்போதும் அவர் இடைக்காலப் பிரதமரை நியமிக்கலாம் என மகாதீர் மேலும் தெரிவித்தார்.