Home நாடு கொவிட்-19; மரணங்கள் 212! புதிய தொற்றுகள் 17,236!

கொவிட்-19; மரணங்கள் 212! புதிய தொற்றுகள் 17,236!

3261
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 9) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 17,236 ஆகப் பதிவாகியது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

அதே வேளையில் மரண எண்ணிக்கை  212 ஆகப் பதிவாகியது. நேற்றைய உச்சகட்ட எண்ணிக்கையான 360 என்பதுடன் ஒப்பிடும்போது இன்றைக்கு மரண எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட அளவில் மரண எண்ணிக்கை தினசரி நீடித்து வருகிறது.

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 10,961 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் 196 பேர் மருத்துவமனைகளிலேயே மரணமடைந்திருக்கின்றனர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் 16 பேர்கள் ஆகும்.

ஒருநாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,187 ஆகப் பதிவாகியது. இதைத் தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,041,585 ஆக உயர்ந்தது.

புதிய தொற்றுகளைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,279,776 என பதிவாகியது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,095 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 579 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.

227,230 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.