அதே வேளையில் மரண எண்ணிக்கை என்றுமில்லாத அளவுக்கு 360 ஆகப் பதிவாகியது.
இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 10,749 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒருநாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,055 ஆகப் பதிவாகியது. இதைத் தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,026,398 ஆக உயர்ந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,095 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 571 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிலாங்கூரில் மட்டும் 6,565 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 1,883 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இந்த இரு மாநிலங்கள் தவிர்த்து மேலும் 4 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.
கெடா, நெகிரி செம்பிலான், ஜோகூர், சபா ஆகியவையே அந்த 4 மாநிலங்களாகும்.
225,393 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.