Home நாடு பிரதமராகத் தேர்வு பெறுபவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்

பிரதமராகத் தேர்வு பெறுபவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்

946
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று யார் வெற்றி பெற்றாலும், மாமன்னர் யாரைப் பிரதமராக நியமித்தாலும், அவர் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.

மாமன்னரின் சார்பில் அரண்மனைக் காப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமராக வெற்றி பெறும் வேட்பாளர் தோல்வியடைந்த வேட்பாளரோடு இணைந்து பணியாற்ற வேண்டும், கைகோர்க்க வேண்டும் என்றும் மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தேசியத் தடுப்பூசித் திட்டத்திற்கும், பொருளாதார மீட்சிக்கும் பிரதமராகத் தேர்வு பெறுபவரின் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் மாமன்னர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பிரதமராக, யாரை ஆதரிக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்க மாமன்னர் விதித்த காலக்கெடு, இன்று மாலை 4.00 மணியுடன் முடிவடைந்தது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

அதன் பின்னரே மாமன்னர் யாரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.