கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 19 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 22,948 ஆக அதிகரித்தது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக இருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 1,489,460 ஆக உயர்ந்ததாக சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் தகவல் வெளியிட்டார்.
சிலாங்கூர் 7,175 தொற்றுகளைப் பதிவு செய்த வேளையில் கோலாலம்பூர் 1,439 தொற்றுகளைப் பதிவு செய்தன.
இவை தவிர, பினாங்கு, பேராக், ஜோகூர், கிளந்தான், சரவாக் ஆகிய 5 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.
கெடா, சபா இரண்டு மாநிலங்களும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்திருக்கின்றன.