Home 13வது பொதுத் தேர்தல் சதி காரணமாக வேட்புமனு தாக்கல் செய்யவில்லையாம்? தே.மு. விசாரணை என்று தெங்கு அட்னான் அறிவிப்பு!

சதி காரணமாக வேட்புமனு தாக்கல் செய்யவில்லையாம்? தே.மு. விசாரணை என்று தெங்கு அட்னான் அறிவிப்பு!

515
0
SHARE
Ad

tengku-adnanகோலாலம்பூர், ஏப்ரல்22- மலேசியா வரலாற்றில் காண முடியாத அளவிற்கு 13ஆவது பொதுத்தேர்தல் பிரச்சாரங்களும், சம்பவங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன.

இத்தேர்தலில் கிளந்தான் பாசீர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக அம்னோவைச் சேர்ந்த சே ஜோஹான் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தல் தினத்தன்று  அவர் வேட்புமனு தாக்கல் செய்ய தவறியதால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் வேட்புமனுத் தாக்கலின்போது அம்னோ வேட்பாளர் சே ஜோஹான் வேட்பு மனுத் தாக்கல் மையத்தில் இப்ராகிம் அலியுடன் நின்றிருந்தார் என்று பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவித்தன.

சே ஜோஹான் வேட்புமனு தாக்கல் செய்ய தவறியதால் அத்தொகுதியில் பெர்காசா தலைவர் டத்தோ இப்ராஹிம் அலிக்கும் பாஸ் கட்சி வேட்பாளர் நிக் முகமட் அப்டு நிக் அஸிஸூக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

கிளந்தான் மாநில மந்திரி பெசாரும் பாஸ் ஆன்மிகத்தலைவருமான டத்தோ நிக் அஸிஸின் புதல்வர்தான் நிக் முகமட் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் விதிமுறையை அம்னோ வேட்பாளர் சே ஜோஹான்  மீறி விட்டதால் அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அம்னோ ஒருபோதும்  இதுபோன்ற வேட்பாளர்களுடன் சமரசம் செய்து கொள்ளாது என்றும் தெங்கு அட்னான் தெரிவித்தார்.

பெர்காசா மற்றும் இப்ராகிம் அலி ஆகியோருடன் அம்னோ கொண்டுள்ள இணக்கப் போக்கின் அடிப்படையில்தான் இப்ராகிம் அலிக்கு ஆதரவாக அம்னோ வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார் என இணையத் தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.