Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : தேசிய தினம் – 25 ஆண்டுகால சேவை – குறித்த பரப்புரை

ஆஸ்ட்ரோ : தேசிய தினம் – 25 ஆண்டுகால சேவை – குறித்த பரப்புரை

724
0
SHARE
Ad

கோலாலம்பூர் : விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டும், கடந்த 25 ஆண்டுகளாக ஆஸ்ட்ரோ வழங்கி வந்திருக்கும் சேவையை முன்னிட்டும் அதைக் கொண்டாடும் விதமாக ஆஸ்ட்ரோ பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.

• வலுவாக இருக்க அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைய ஊக்குவிக்கும் ‘KITA Teguh Bersama’ பிரச்சாரம்

• ‘Tanah Tumpahnya Darah Kita’, ‘We Are No Different’, ‘On Your Mark’ என முதல் ஒளிபரப்புக் காணும் பல நிகழ்ச்சிகள்

#TamilSchoolmychoice

• அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், 150-க்கும் மேற்பட்டத் தலைப்புகளை 16 ஆகஸ்டு முதல் 3 அக்டோபர் வரை அலைவரிசை 100-இல் ஆஸ்ட்ரோ 25 (Astro 25) வழங்குகிறது.

ஆஸ்ட்ரோ இந்தத் தேசியத் தினத்தை #KitaTeguhBersama என்ற கருப்பொருளுடன் கொண்டாடுகிறது. மலேசியர்களுக்குச் சேவை வழங்கிய நிறுவனத்தின் 25-வது ஆண்டையும் இவ்வாண்டுக் குறிக்கின்றது. சிறந்த மலேசிய மற்றும் ஆசியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் மற்றும் புதிய ஆவணப்படம் ஆகியவற்றைத் தாங்கி மலரும் அலைவரிசை 100-இல் ஆஸ்ட்ரோ 25-ஐ முன்னிட்டு (Astro 25) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக ஆஸ்ட்ரோ பல நிகழ்ச்சிகளை ஒளியேற்றுகிறது.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் 2021 ஆகஸ்டு 16 முதல் அக்டோபர் 3 வரை கிடைக்கப் பெறும்.

ஆஸ்ட்ரோ தலைமை நிர்வாக அதிகாரி ஹென்ரி டான்

ஆஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹென்ட்ரி டான் கூறுகையில், “இந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் சிறப்பான மெர்டேக்கா மற்றும் தேசியத் தினம். எங்களின் கருப்பொருள் #KitaTeguhBersama என்றால் நாம் ஒன்றாக இணைந்தால் வலுவாகவும் சிறப்பாகவும் இருப்போம் என்றுப் பொருள்படும். இது மலேசியர்களில் நாம் பார்த்தவற்றின் சிறந்ததை பிரதிபலிப்பதாகும். மேலும், இந்த முன்னோடியில்லாக் காலக்கட்டத்தில், நாம் ஒற்றுமையாகவும், மீட்சிப் பெறவும் மற்றும் வளரவும் தேவையானப் பொது மதிப்பாகத் தொடர்கிறது” என்று கூறினார்.

#KitaTeguhBersama கருப்பொருளுக்கு ஒப்ப பல முயற்சிகளை ஆஸ்ட்ரோ மேற்கொண்டுள்ளது, அவை பின்வருமாறு:

• தேசிய இரத்த வங்கியின் இரத்த தான முயற்சியை ஆதரித்தது.

• பொதுச் சேவை அறிவிப்புகள், PPV-களில் தன்னார்வத் தொண்டு மற்றும் நாடு முழுவதும் தனிமைப்படுத்துதல் மையங்களில் தொலைக்காட்சிகள் மற்றும் ஆஸ்ட்ரோ சேவைகளை வழங்குதல் என நாட்டின் கோவிட்-19 நோய்த் தடுப்பு ஊக்குவிப்பை ஆதரித்தது.

• KamiCare சமூகத் திட்டங்களின் மூலம் உதவிக் கோருபவர்களுக்கு உதவியது.

• KamiCare MBiz பிரச்சாரத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவியது.

• மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களையும் மற்றும் B40 மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கியது.

• நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அலைவரிசைகளின் இலவச அணுகல், இடைவிடாத நாடகம், புதிய முத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் பிரீமியம் அசல் தொடர்களின் வழி மலேசியர்களைத் தகவலறியச் செய்ததோடு அவர்களை மகிழ்விக்கவும் மற்றும் மேம்படுத்தவும் செய்தது.

• குழந்தைகள் வீட்டிலிருந்தே கல்விக் கற்றுக்கொள்ள எங்களின் கல்வி உள்ளடக்கத்தை அதிகரித்தது.

• Astro Arena வாயிலாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மலேசிய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மற்றும் பெருமைக் கொள்ளும் மலேசியர்களை ஒன்றிணைத்தது;

டான் தொடர்ந்து கூறுகையில், “ஆஸ்ட்ரோ தனது 25 ஆண்டுக் காலப் பயணத்தைக் கொண்டாடுகிறது. Astro GO, Disney+ Hotstar, HBO Go, iQIYI மற்றும் Netflix ஆகியச் சிறந்த ஸ்ட்ரீமிங் சேவைகளை ஒருங்கிணைத்தல் உட்பட சிறந்த உள்ளடக்கக் கலவையை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். அதுமட்டுமல்லாது, மலேசியர்களை மேலும் மகிழ்விக்க உள்ளூர் அசல் உள்ளடக்கம் மற்றும் நேரலை முத்திரை நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்துவோம்” என்று கூறினார்.

“எங்கள் வாடிக்கையாளர்களுக்கு 25 ஆண்டுகள் சேவை வழங்கியதை நாங்கள் திரும்பிப் பார்க்கையில், முதல் HD, 3D மற்றும் 4K UHD ஒளிபரப்பு, உங்கள் வீட்டில் முதல் சினிமா, Astro First, மண்டலத்தின் முதல் 24/7 உள்ளூர் விளையாட்டு அலைவரிசை மற்றும் பல முதல் சாதனைகளோடுப் பலரின் வாழ்க்கையில் பங்கு வகித்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். கல்வியில் முதன்மை வகித்துள்ளோம், உள்ளூர் விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு வீரர்களை உலக அரங்கில் நிறுத்தியுள்ளோம், உள்ளூர் உள்ளடக்கத்திற்கானத் தரத்தை உயர்த்தியுள்ளோம், நட்சத்திரங்களைக் கண்டுப் பிடித்ததோடு உருவாக்கியுள்ளோம், மலேசியர்கள் பிரகாசிக்கவும் தங்களின் கனவுகள் மற்றும் திறன்களை உணரவும் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். எங்களின் திறமையாளர்களான நபில், அஸ்னில், ஜிஸான், ரெமி, ஹுய் மின், டேனேஷ், ஈன் மற்றும் அர்னால்ட், சியு கெங் குவான் ஆகியோர் தடைகளைத் தாண்டித் தங்களின் கனவுகளை அடைந்துள்ளனர். கனவுகள் ஒன்றாக உருவாக்கப்படுகின்றன என அவர்கள் கூறுவதுப் போல எங்களின் வாடிக்கையாளர்கள் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை” என்றும் டான் தெரிவித்தார்.

கடந்த 12 மாதங்களில், Mael Totey எனும் Astro First திரைப்படம் ஆஸ்ட்ரோவில் மிக அதிக வசூல் செய்த திரைப்படமாகப் பதிவிட்டதில் ஆஸ்ட்ரோ சாதனைப் படைத்துள்ளது, Projek Anchor SPM எனும் உள்ளூர் பிரீமியம் நாடகத்தை அறிமுகப்படுத்தியது, Hantu Kak Limah வெற்றியை Kampong Pisang வெற்றியுடன் விரிவாக்கியது, மற்றும் Scammer மற்றும் Ratu Ten Pin வழி புதிய பார்வையாளர்களை ஈர்க்க அதன் நாடக வரிசையைப் புதுப்பித்தது. Astro RIA-வில் ஒளிபரப்பப்பட்ட Rindu Awak Separuh Nyawa 2021-ஆம் ஆண்டின் #1 நாடகம் ஆனது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Zack Snyder’s Justice League, Friends: The Reunion பிரத்தியேக முதல் ஒளிபரப்புக் கண்டன மற்றும் அனைவரும் பேசும் கே-நாடகம், Penthouse. எங்களின் தாய்மொழி உள்ளடக்க அறிவுசார் உடமைகளான முதன்மைச் செய்தி மற்றும் பேச்சு நிகழ்ச்சிகளான Evening Edition மற்றும் Prime Talk, சிறந்தச் சீன முத்திரை நிகழ்ச்சியான Classic Golden Melody, ஆவணப்படமான Social Playlist, ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் தமிழ்லட்சுமி மற்றும் திரைப்படங்களான வெட்டி பசங்க, வெடிகுண்டு பசங்க மற்றும் அப்பளம் ஆகியவைத் தொடர்ந்து நிறுவனத்தின் விரும்பத்தக்க நிகழ்ச்சிகளாகத் திகழ்கின்றன.

அனைவரும் அலைவரிசை 100-இல் ஆஸ்ட்ரோ 25 (Astro 25)
அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் அலைவரிசை 100 வாயிலாக ஆஸ்ட்ரோ 25-இல் ஆகஸ்டு 16 முதல் அக்டோபர் 3 வரை முதல் ஒளிப்பரப்புக் காணும் புத்தம் புதிய நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்:-

• Tanah Tumpahnya Darah Kita, ஆவணப்படம் முதலில் தனது மனைவி மற்றும் இளம் குடும்பத்தினருக்குக் கடிதங்கள் மூலம் இராணுவத்தில் தனதுத் தியாகத்தை விவரித்த ஒரு நபரின் கதையுடன் தொடங்கியது. பின், இனம், மதம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்ட நம் நாட்டைப் பாதுகாப்பதில் வீரம் கொண்ட மற்ற வீரர்களின் கதைகளும் இணைக்கப்பட்டது. இந்த துணிச்சலான மனிதர்களின் படிகள் மற்றும் சோதனைகளைத் திரும்பக் கண்டறிவதில், எங்கள் துணிச்சலான வீரர்களின் தியாகத்தின் விளக்கத்தில் ஈடுப்பட ஆர்வமாக இருந்த ரெட் ஹாங் யி உட்பட இளம் மலேசியக் கலைஞர்களின் குழுவை நாங்கள் நியமித்தோம்.

• சியு கெங் குவானின் We Are No Different- மலேசியக் குடும்பங்களுக்கிடையேயான வெவ்வேறு இனங்களைச் சார்ந்தத் தத்தெடுப்பு பற்றிய முதல் ஆவணப்படம். அதன் கதைகள் பெரும்பாலும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டாலும் அவை வழக்கமாகக் கருதப்படுகின்றன. இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட அன்பின் பிணைப்புகளைப் பற்றிய அவர்களின் கதைகளை வெளிக்கொணர நாங்கள் ஹீரோ, சாரா, லாவின்யா மற்றும் கமலா ஆகியோரைச் சந்தித்தோம்.

• மிகவும் விரும்பப்பட்ட உள்ளூர் பிரபலங்களின் கனவுகளை நனவாக்குவதில் அவர்களின் வாழ்க்கையை விவரிக்கும், Journey To Stardom
சிறந்த மலேசிய மற்றும் ஆசிய திரைப்படங்கள், விரும்பத்தக்கப் பொழுதுபோக்கு மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள், உட்பட 150-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். பலரின் கனவுகளையும் தாண்டி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை அடைந்தக் குறிப்பிடத்தக்க மலேசியத் திரைப்படங்களான Ola Bola, The Journey, Paskal, Polis Evo, மற்றும் Hantu Kak Limah ஆகியற்றை இரசிகர்கள் கண்டு மகிழலாம்.

Naga DDB Tribal-இன் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி, ஆல்வின் தியோ கூறுகையில், “இந்த ஆவணக் கதையை உருவாக்கப் பல ஆண்டுகளாகின. நம் வரலாற்றில் அவசரக்காலம் (Darurat) மற்றும் மோதல் (Konfrantasi) காலக்கட்டத்தில் அனைத்து மத வீரர்களுடன் அருகருகே பீரங்கி அதிகாரியாகப் பணிப்புரிந்த என் தந்தையின் கதைகளால் நான் ஊக்குவிக்கப்பட்டேன். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக ‘நாம்’-ஆக (‘kita’) ஒன்றிணைந்த ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய இந்தத் தனிப்பட்டக் கதைகளை உயிர்ப்பித்ததற்காகச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

ரெட் ஹாங் யி கூறுகையில், “Tanah Tumpahnya Darah Kita எனக்கு முக்கியமானது. ஏனென்றால் முந்தைய வீரர்களைப் பற்றி எனக்கு எவ்வளவுக் குறைவாகத் தெரியும் என்பதை நான் உணர்ந்தேன். வீரர்களைச் சந்தித்ததன் மூலம், நாட்டை நேசிக்கும் அனைத்து வகைப் பின்னணியிலான மக்களால் மலேசியா எவ்வாறுப் போராடப்பட்டது என்பதை நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் நாட்டுக்காகச் செய்தத் தியாகங்களுக்காக உயரிய அங்கீகாரம் மற்றும் மரியாதைக்கு உரியவர்கள், எனவே எனது படைப்புகள் படைவீரர்களின் கதையைச் சொல்லும் என்று நம்புகிறேன்.”

Astro First-இல் முதல் ஒளிபரப்புக் காணும் On Your Mark
சீனாவில் இயக்குநர் சியுவின் முதல் வெற்றித் திரைப்படமான, On Your Mark, Astro First வாயிலாக (அலைவரிசை 480), 2021 ஆகஸ்டு 26 அன்று நேரடியாக ஒளிப்பரப்புக் காணுகிறது.

ஒரு மாரத்தான் பந்தயச் சவாலில் பங்கெடுக்கும் மாற்றுத் திறனாளி மகனுக்குப் பக்கபலமாக இருக்கும் ஒரு தந்தையின் உணர்ச்சிபூர்வமானப் பயணத்தை On Your Mark சித்தரிக்கின்றது. இந்தப் படம் சீனாவில் 100 மில்லியன் ரிங்கிட் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பெற்றுள்ளது.

சியு கூறுகையில், “சீனாவில் திரைப்பட வெளியீட்டின் போதுக் கிடைத்தப் பெரும் ஆதரவால் நான் மகிழ்ச்சியடைகிறேன். தந்தை மற்றும் மகனின் ஆழ்ந்த அன்பைச் சித்தரிக்கும் கதையால் மலேசிய இரசிகர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் அனைத்து இளம் மற்றும் ஆர்வமுள்ள மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் தங்கள் கனவுகளைத் தொடரவும், அதற்க்கு அப்பால் செல்லவும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் அதிகமான நிகழ்ச்சிகள்

விரும்பத்தக்க 25 சிறந்தப் பாடல்கள், சிறந்த 25 மலேசியப் பாடல்கள் என சிறப்பாக உருவாக்கப்பட்டப் பல உள்ளடக்கங்களை SYOK செயலி மற்றும் வானொலிகளில் ஆஸ்ட்ரோ வானொலி நிர்வகித்து வழங்கும். புகழ்பெற்ற உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட 90-நிமிட தேசியத் தின மெய்நிகர் இசை நிகழ்ச்சியை 2021 ஆகஸ்டு 31 அன்று ராகா தனது நேயர்களுக்கு முகநூல் பக்கத்தில் வழங்கும்.

25 ஆண்டுகளாக மலேசியர்களுக்குச் சேவை வழங்கியதில் ஆஸ்ட்ரோ பெரும் மகிழ்ச்சி அடைகிறது. டிவி, வானொலி, மின்னியல் மற்றும் வர்த்தகத் தளங்களில் மலேசியர்களை மகிழ்விப்பதோடுத் தகவலறியச் செய்யும் தனது உறுதிப்பாட்டை ஆஸ்ட்ரோ தொடரும்.

ஆஸ்ட்ரோவின் 25-வது ஆண்டு விழா பிரச்சாரம் மற்றும் #KitaTeguhBersama பிரச்சாரம் பற்றிய மேல் விவரங்களுக்கு www.astro.com.my/bettertogether எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.