Home உலகம் ஆப்கானிஸ்தான் : மீட்புப் பணிகளில் தனியார் விமானங்களையும் ஈடுபடுத்துகிறது அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் : மீட்புப் பணிகளில் தனியார் விமானங்களையும் ஈடுபடுத்துகிறது அமெரிக்கா

570
0
SHARE
Ad

காபூல் : ஒரே களேபரமாக மாறியிருக்கும்  ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து சிக்கிக் கொண்ட அமெரிக்கர்களை மீட்கும் பணிகளில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.

இதுவரையில் அமெரிக்க இராணுவ விமானங்கள் மட்டுமே இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. தற்போது தனியார், வர்த்தக விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபட, அமெரிக்கா உத்தரவிட்டிருக்கிறது.

இதன்மூலம், அமெரிக்கர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்கும் பணியை அமெரிக்கா மேலும் விரைவுபடுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் குறைந்தது 7 பேர் காபூல் விமான நிலையத்தின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர் என பிரிட்டன் இராணுவம் அறிவித்திருக்கிறது.

தாலிபான் அரசாங்கத்திடம் இருந்து தப்பிச் செல்லவிரும்பும் மக்கள் காபூல் விமான நியைத்தில் குவிந்திருக்கின்றனர். முந்தைய அரசாங்கத்தில் பணியாற்றியவர்களும், அமெரிக்க அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு நல்கியவர்களும் தாலிபான் அரசாங்கத்தால் பழிவாங்கப்படுவோம் என அஞ்சுகின்றனர்.

அதன் காரணமாக, நாட்டை விட்டு வெளியேற முயற்சிகள் செய்து வருகின்றனர்.

அமெரிக்க அரசாங்கத்திற்காக பணியாற்றிய ஆப்கான் அதிகாரிகளை மீட்டு, அவர்களை ஸ்பெயின் நாட்டின் தென்பகுதியில் உள்ள இரண்டு இராணுவத் தளங்களில் தற்காலிகமாகத் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சாஞ்சசும் இணக்கம் கண்டிருக்கின்றனர்.