கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளியேறி வரும் உள்ளூர் தொலைக்காட்சித் தொடர்கள் தொடர்ந்து இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில் பலதரப்பட்டப்ப இரசிகர்களையும் ஈர்த்த தொடர் தமிழ்லட்சுமி. இந்தத் தொடரின் முதல் பருவத்தில் (சீசன்) கிடைத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பருவத்துக்கான தொடரும் அண்மையில் ஒளிபரப்பாகி இரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
தமிழ்லட்சுமி சீசன் 2 கலைஞர்களுடன் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நேர்காணலில் அதில் பங்கு பெற்ற கலைஞர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்:
டி. எஸ். டாக்டர் விமலா பெருமாள், இயக்குநர் & எழுத்தாளர்:
1. தமிழ்லட்சுமி சீசன் 2-இல் இரசிகர்கள் எதை எதிர்ப்பார்க்கலாம்?
தங்களின் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதோடுக் கடுமையானப் போராட்டங்களையும், திருப்பங்களையும் எதிர்க்கொள்ளும் தமிழ், லெட்சு மற்றும் ஏமி ஆகியோரின் வாழ்க்கைக்கான முடிவைத் தமிழ்லட்சுமி சீசன் 2 வழங்கும்.
முதல் சீசன் வலுவானச் சஸ்பென்சுடன் முடிவடைந்ததால், இரசிகர்கள் இரண்டாவது சீசனில் பல பதில்களை எதிர்பார்த்தனர். ஒரு திருப்திகரமான முடிவுக்காகச், சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் இரசிகர்களை இறுதி அத்தியாயம் வரை உற்சாகப்படுத்த நாங்கள் பல புதியக் கதாப்பாத்திரங்களை இணைத்துள்ளோம்.
தைரியமான மற்றும் அக்கறையுள்ளப் பெண்களின் அழகைத் தழுவும் அதே வேளையில் அவர்களுக்கு ஊக்கமளிப்பதோடுச் சவால்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றிபெற முடியும் என்ற உத்வேகத்தை இரண்டாவது சீசன் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
2. இரண்டாவதுச் சீசனை இயக்கிய உங்களின் அனுபவம் எவ்வாறு வேறுப்படுகிறது?
முதல் சீசனில் இரசிகர்களிடமிருந்துக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது சீசனுக்காக நான் சற்றுப் பயந்தேன். தடிப்பான ஸ்கிரிப்ட், கூடுதல் நடிகர்கள், கூடுதல் கதைக் களங்கள் மற்றும் நீண்ட படப்பிடிப்பு நாட்கள் ஆகியவற்றினால் நான் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
நாங்கள் அனைவரும் ஒரே “கப்பலில்” பயணிப்பதை உறுதிச் செய்ய அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருடன் நான் மிகவும் நெருக்கமாக வேலைச் செய்ததோடு, தொடர்பிலும் இருந்தேன்.
உண்மையைக் கூறினால், வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் ஒரு சிறந்த குழு அமைந்ததால் எனது வேலை சற்று எளிதானது. சரியானக் “கப்பலை”, சரியான நேரத்தில், சரியான நபர்களுடன் தயாரிப்பாளர் பொருத்திக் கொடுத்ததால் எந்த இடையூறும் இல்லாமல் எனது வேலைகளைச் செவ்வெனச் செய்ய முடிந்தது.
இவ்வேளையில், தயாரிப்பாளருக்கு நான் நிச்சயமாக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். “பயணம் எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அதன் முடிவு அவ்வளவிற்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும்”, என்பதற்கு ஒப்ப பயணம் கடினமாக இருந்தாலும் இறுதியில் திருப்திகரமாக இருந்தது.
சீசன் 1-க்கானக் கதையை நாங்கள் முதலில் எழுதத் தொடங்கியபோது, தொடரை ஒளிபரப்பலாம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், ஆஸ்ட்ரோவின் ஆதரவுடன், இப்போது தமிழ்லட்சுமி சீசன் 2 ஒளியேறிக் கொண்டிருக்கிறது. ஆகையால், ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
3. இயக்குநர் மற்றும் எழுத்தாளராக இரண்டு வெவ்வேறு பொறுப்புகளைச் செவ்வெனக் கையாண்ட உங்களின் அனுபவங்கள் யாவை?
உண்மையைக் கூறினால், நான் இயக்கும் திரைப்படம்/தொடருக்கு நானே எழுத்தாளராக இருப்பதை நான் எப்போதும் விரும்புவேன். நான் அந்தச் செயல்முறையை நேசிப்பதோடு, மதிக்கிறேன் மற்றும் புரிந்தும் கொண்டேன்.
தமிழ்லட்சுமி-ஐப் பொறுத்தவரை, டேனேசும் நானும் ஆரம்பத்திலிருந்தே எழுதுகிறோம். இதனை எழுத எங்களுக்குப் பல மாதங்களானது. படப்பிடிப்பு தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ஸ்கிரிப்ட் முழுமையாக எழுதி முடிக்கப்பட்டது. இதனால் “ஸ்கிரிப்ட் வாசிப்பு” நடவடிக்கைக்கு எங்களுக்குப் போதுமான நேரம் இருந்தது.
“எதுவும் தவறாகக் கூடும், தவறாகப் போகும்” எனும் மரபியின் மரபுக்கு (Murphy’s Law) ஏற்பத் திரைப்படத் தயாரிப்பில் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஓர் எழுத்தாளராக, நாம் எழுதும் சில விஷயங்கள் திரைப்படம்/தொடரில் மாற்றப்படும் அல்லது பயன்படுத்தப்படாது என்பதை நான் ஏற்றுக்கொண்டேன்.
ஆனால், நான் இயக்குநராகவும் இருப்பதால், ஸ்கிரிப்டின் மீது எனக்கு முழுமையானக் கட்டுப்பாடு உள்ளது. அதைப் பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. எனவே, திரைப்படம்/தொடருக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்க எனது எழுத்தாளரின் தொப்பியைக் கழற்றி, எனது இயக்குநர் தாவணியை அணியவோ அல்லது நேர்மாறாக மேற்க்கொள்ளவோ எனக்கு அற்புத வாய்ப்புகள் உள்ளன.
நடித்த கலைஞர்கள் ஹேமாஜி, நித்யஸ்ரீ & மூன் நிலா:
1. தமிழ்லட்சுமி சீசன் 2 தொடரில் நீங்கள் வகித்தக் கதாப்பாத்திரங்களைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்?
ஹேமாஜி: தமிழின் வாழ்க்கையில் ஏற்படும் பலரும் எதிர்பார்க்காத திருப்பங்களைத் தவிர்த்துத் தனது தொழில் மற்றும் குடும்பத்தைச் சமநிலைப்படுத்தச் சிறப்பாக முயற்சிக்கும் அதே உணர்ச்சிகரமான வேலைச் செய்யும் மனைவி. இம்முறை, தமிழ் பல புதிய சவால்களை எதிர்கொள்ளப்போகிறார்.
நித்யஸ்ரீ: தமிழ்லட்சுமி சீசன் 2-இல் நான் லெட்சுமித்ரா எனும் தைரியமான வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். பெரும் பிரச்சினைகளையும் போராட்டங்களையும் எதிர்கொண்டாலும், தனது வாழ்க்கையில் சந்திக்கும் தடைகளை லெட்சு எப்பொழுதும் நிர்வகிக்க முயற்சிப்பார்.
மூன் நிலா: இந்த சீசனில் நான் மிகவும் தைரியமான மற்றும் தனித்துவமானக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். நீங்கள் அறிந்ததைப் போல, சீசன் 1-இல் ஏமி மிகவும் அப்பாவியானவர் மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர். இருப்பினும், சோகமான உச்சக் கட்டத்திற்குப் பிறகு அவரது கதாப்பாத்திரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு சீசன் 2-இல் வித்தியாசமான ஏமியை இரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம்.
2. இந்தச் சீசனில் நடித்ததில் நீங்கள் கற்றுக் கொண்ட சில படிப்பினைகள் யாவை?
ஹேமாஜி: நிச்சயமாக, இரண்டு சீசன்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன. அதிக உணர்ச்சி, ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்புத் தேவைப்படும் கதைக்களங்கள் சீசன் 2-இல் மிகவும் தீவிரமாக இருந்தன. தமிழ் கதாப்பாத்திரத்தில் மீண்டும் நடித்தது என்னை மகிழ்வித்தது என்றுதான் கூறுவேன்.
நித்யஸ்ரீ: இந்தப் பயணம் முழுவதும் நான் கற்றுக் கொண்ட படிப்பினைகள் பல உள்ளன. படப்பிடிப்பின் முதல் நாளில் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். இருப்பினும் தயாரிப்புக் குழு மற்றும் சகக் கலைஞர்கள் என்னைக் கையாண்ட விதம் எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தது. நான் ஒரு அன்பானக் குடும்பத்துடன் வேலைச் செய்வது போல் உணர்ந்தேன்.
மூன் நிலா: சீசன் 1-இல் அப்பாவியாக இருந்த ஏமி சீசன் 2-இல் தைரியமானப் பெண்ணாக மாற்றப்பட்டார். தான் சந்தித்தச் சவால்களை மிகவும் நன்றாகக் கையாளுவார். ஒரு அப்பாவிக் கதாப்பாத்திரத்திலிருந்து மிகவும் தைரியமான ஒரு கதாப்பாத்திரமாக மாறியதை நான் அனுபவித்ததோடுத் தனிப்பட்ட முறையில் பல படிப்பினைகளையும் கற்றுக்கொண்டேன்.
3. இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?
ஹேமாஜி: தமிழ்லட்சுமி சீசன் 2 அதற்குத் தகுதியான மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்! எங்களின் இரசிகர்கள் எப்போதும்போல மீண்டும் அத்தொடரை விரும்பிக் கண்டுக் களிப்பதை உறுதிச் செய்யத் தமிழ்லட்சுமி சீசன் 2-க்கு நிறையக் கடின உழைப்புகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. கதைக்களங்கள் மற்றும் திரையில் எங்களின் கலைஞர்களின் அருமையானப் படைப்புகள் நிச்சயமாக இரசிகர்களைத் தங்களின் இருக்கையிலேயே அமரச் செய்யும்.
நித்யஸ்ரீ: தமிழ்லட்சுமி சீசன் 2, சீசன் 1-ஐப் போல மாபெரும் வெற்றியை அடையும் என்ற அதிக நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த சீசன் அனைத்து இரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்திச் செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த சீசனை இரசிகர்களுடன் சேர்ந்துப் பார்க்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன், வாருங்கள் ஒன்றாகக் கண்டுக் களிப்போம்!
மூன் நிலா: ஏமியைப் போன்று சவால்களை எதிர்க்கொள்ளும் பல பெண்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் நிச்சயமாக ஏமியுடன் தங்களைத் தொடர்புப்படுத்த முடியும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற இந்தத் தொடர் மூலம் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.