Home நாடு கொவிட் 19 : புதிய தொற்றுகள் 18 ஆயிரமாகக் குறைந்தன

கொவிட் 19 : புதிய தொற்றுகள் 18 ஆயிரமாகக் குறைந்தன

1534
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 1) வரையிலான ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 18,762 ஆகப் பதிவாகியது.

மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைக் மேற்காணும் வரைபடத்தில் காணலாம்:

இன்றைய தொற்றுகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,765,016 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் 3,711 தொற்றுகளுடன் மிக அதிகமானத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கெடா, பினாங்கு, ஜோகூர், கிளந்தான் ஆகிய 4 மாநிலங்களில்  ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.

சபா, சரவாக் மாநிலங்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்தன.

கோலாலம்பூர் 573 தொற்றுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal