Home இந்தியா ஆந்திராவில் தேர்தலுக்கு தயாராகும் நடிகர்-நடிகைகள்

ஆந்திராவில் தேர்தலுக்கு தயாராகும் நடிகர்-நடிகைகள்

616
0
SHARE
Ad

ANDARA-PRADESHநகரி, ஏப்ரல் 22-ஆந்திர சட்டசபையில் பதவி காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட நடிகர்- நடிகைகள் தயாராகி வருகிறார்கள்.

நடிகைகள் விஜயசாந்தி, ரோஜா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, கவிதா, பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி, நடிகர்கள் பாலகிருஷ்ணா, முரளி மோகன், நரேஷ், நகைச்சுவை நடிகர் தர்மபுரம் சுப்பிரமணியம் ஆகியோர் தயாராகி வருகிறார்கள்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நடிகை ரோஜா நகரி தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெயப்பிரதா ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஜெயசுதா செகந்திரபாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். தேர்தலின்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்து மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தெலுங்கு தேசத்துக்கு ஆதரவாக நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., பாலகிருஷ்ணா ஆகியோர் கடந்த தேர்தலில் பிரசாரம் மட்டும் செய்தார்கள். வரும் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று பாலகிருஷ்ணா அறிவித்து உள்ளார்.

சந்திரபாபு நாயுடு அவரது மகன் லோகேசை அரசியல் வாரிசாக முன்னிலைப்படுத்தி வருவது ஜூனியர் என்.டி.ஆருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த முறை அவர் பிரசாரத்தில் இறங்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

நடிகைகள் கவிதா, கீதாஞ்சலி, நடிகர் முரளிமோகன் ஆகியோர் தெலுங்கு தேசம் சார்பில் களம் காண தயாராகி வருகிறார்கள். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி சார்பில் நடிகை விஜயசாந்தி போட்டியிடக்கூடும். காங்கிரஸ் கட்சியில்தான் பிரசாரம் செய்ய நடிகர்- நடிகைகள் இல்லை.

சமீபத்தில் நெல்லூர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் நடிகை வாணிஸ்ரீ காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். ஆனால் மக்கள் அவர் மீது கல்வீசி தாக்கி விரட்டியடித்தனர். எனவே வரும் தேர்தலில் அவர் பிரசாரம் செய்வது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.

எப்படி இருந்தாலும் வரும் தேர்தலில் நடிகர்- நடிகைகள் ஆந்திராவை கலக்கப்போவது உறுதியாகி விட்டது.