கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் ‘நெற்றிக்கண்’ எனும் உள்ளூர் தமிழ் ஆவணப்படத்தை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 5 முதல் கண்டு மகிழலாம்.
ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 5 தொடங்கி இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாகவும் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி துல்லிய அலைவரிசையிலும் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் காண்கிறது இந்த நிகழ்ச்சி.
சிந்தனையைத் தூண்டும் விதத்திலும், பலதரப்பட்ட விவாதங்களை உள்ளடக்கியும் ‘நெற்றிக்கண்’ எனும் உள்ளூர் தமிழ் ஆவணப்படம் அமைந்திருக்கும் என்பதை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம்.
உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர், சண்முகம் இயக்குநராகவும், காந்திமதி சுப்பையா நிர்வாகத் தயாரிப்பாளராகவும், இந்தத் தொடரின் பின்னணியில் உள்ளனர்.
உள்ளூர் சமூகங்களை ஆக்கிரமித்துள்ள, தனித்துவமான நம்பிக்கைகள், மத நடைமுறைகள், ஜோதிடம், பழங்கால புராணங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றை ஆழ்ந்த அணுகுமுறையில் சித்தரிப்பதன் வழி இந்த ஆவணப்படத் தொடர் இரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
13 அத்தியாயங்களைத் தாங்கி மலரும் இந்த ஆவணப்படம், புகல் அரா எனும் உள்ளூர் திறமையாளரைத் தொகுப்பாளராக அறிமுகப்படுத்துகிறது. தொகுப்பின் அம்சங்களை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு 30 நிமிட அத்தியாயமும் நுண்ணறிவுகள், தனிப்பட்டக் கருத்துக்கள், சிந்தனைத் துளிகள், நிஜ வாழ்க்கை அனுபவங்கள் என பலவற்றைச் சித்தரிக்கிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 202) ‘நெற்றிக்கண்’ ஆவணப்படத்தின் புதிய அத்தியாயங்கள் முதல் ஒளிபரப்புக் காணுகின்றன.
ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal