‘படத்தைப் பார்த்து பதிலைச் சொல்லு’ போட்டியைப் பற்றிய விவரங்கள்:
• செப்டம்பர் 6, 2021 முதல் 17 வரை வானொலி அல்லது SYOK செயலியின் வழி நடத்தப்படும் ‘படத்தைப் பார்த்து பதிலைச் சொல்லு’ எனும் போட்டியில் பங்கேற்று 6,000 ரிங்கிட் மதிப்பிலான பரிசுகளில் ஒரு பங்கை வெல்லும் ஓர் அரிய வாய்ப்பை ராகா இரசிகர்கள் பெறலாம்.
• ஒவ்வொரு போட்டி அங்கத்திலும் ஒரு பாடலைப் பற்றியத் மறைமுகத் தகவல்கள் (Clue) மூன்று படங்கள் வடிவங்களில் ராகாவின் இன்ஸ்டாகிராம் கதையில் (Instagram story) வெளியிடப்படும்.
• வானொலியில் அழைப்புக்கானச் சமிக்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளும் போது பங்கேற்ப்பாளர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம். வெற்றிபெற, வழங்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் சரியான பாடலை 10 வினாடிகளுக்குள் யூகித்துக் கூற வேண்டும்.
• முதல் மறைமுகத் தகவலுக்குச் சரியாகப் பதிலளிக்கும் போட்டியாளர் 150 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். பதில், பிழை என்றால் அடுத்த மறைமுகத் தகவல்கள் ராகாவின் இன்ஸ்டாகிராம் கதையில் (Instagram story) வெளியிடப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது மறைமுக் தகவல்களுக்கு பரிசுத் தொகை முறையே 100 மற்றும் 50-ரிங்கிட்டாகக் குறைக்கப்படும்.
• முந்தையப் போட்டி அங்கத்தில் வெளியிடப்பட்ட மூன்று மறைமுகத் தகவல்களுக்கு பங்கேற்பாளர்கள் யாரும் சரியாகப் பதிலளிக்கவில்லை என்றால் பரிசுத் தொகை (150 ரிங்கிட்) அடுத்தப் போட்டி அங்கத்தில் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்படும்.
• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
‘படத்தைப் பார்த்து பதிலைச் சொல்லு’ போட்டியைப் பற்றிய மேல் விவரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக:
raaga.my
www.facebook.com/RAAGA.my
www.instagram.com/raaga.my
https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw
வானொலியில் கேளுங்கள்
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal