ஒட்டாவா : நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற கனடா நாட்டுப் பொதுத் தேர்தலில் நடப்புப் பிரதமர் ஹென்ரி டுருடோ வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
இருப்பினும் டுருடோ தெளிவானப் பெரும்பான்மையைப் பெறவில்லை. சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்கும் வகையில் மட்டுமே அவரின் வெற்றி அமைந்திருக்கிறது.
2015 முதல் கனடா நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார் 49 வயதான டுருடோ. 2019 முதல் சிறுபான்மை அரசாங்கத்தி்ற்குத் தலைமையேற்று ஆட்சியை நடத்தி வருகிறார்.
கொவிட்-19 பாதிப்புகளை திறமையாகக் கையாண்டது, , அதிக அளவில் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தியது, தனி நபர்களுக்கும் வணிகங்களுக்கும், நிறைய அளவிலான உதவிகள் செய்தது ஆகிய அம்சங்களின் அடிப்படையில் டுருடோ முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்தினார்.
இருந்தாலும் 338 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற அவையில் அவருக்கு மிகப் பெரிய பெரும்பான்மையிலான வெற்றி கிடைக்கவில்லை.
கனடா தேர்தலில் நிறைய இடங்களில் இந்தியர்களும், இலங்கைத் தமிழர்களும் போட்டியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal