கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள பூமிபுத்ராக்களின் பங்குடமையை உயர்த்துவதற்கான திட்டங்கள் உண்மையிலேயே ஏழை பூமிபுத்ராக்களுக்கு உதவவில்லை – மாறாக ஆளும் கட்சியின் பணக்காரர்கள் சிலருக்கே சாதகமாக அமைந்திருக்கிறது என எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் 12-வது மலேசியத் திட்டம் மீதான விவாதங்களில் பங்கேற்றபோது அன்வார் இப்ராகிம் இவ்வாறு கூறினார்.
கடந்த திங்கட்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி 12-வது மலேசியத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
அந்தத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும், மூடா கட்சியின் தலைவருமான சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதும் இதே போன்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal