வாஷிங்டன் : அமெரிக்க இராணுவத்தில் மிகச் சிறப்பான பணிகளை ஆற்றிய வீரராகத் திகழ்ந்து பின்னர் அரசியலில் கால் பதித்து வரலாறு படைத்தவர் காலின் பவல். இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) தனது 84-வது வயதில் அவர் காலமானார். கொவிட் 19 தொற்றால் அவர் காலமானார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் அவர் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகச் செலுத்திக் கொண்டவர் என்றும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கறுப்பினத்தவரான அவர், அமெரிக்க இராணுவப் படைகளின் கூட்டுத் தளபதியாக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பின அமெரிக்கராவார்.
(NGTON (AFP): Colin Powell, a US war hero and the first Black secretary of state who saw his legacy tarnished when he made the case for war in Iraq in 2003, has died from complications from Covid-19. He was 84.
நான்கு நட்சத்திர அந்தஸ்தை தனது இராணுவப் பணிக்காகப் பெற்றவர் அவர். நான் அமெரிக்க அதிபர்களின் கீழ் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டவர்.
வியட்னாம் போரில் அப்போதைய அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கு இராணுவ ஆலோசகராகப் பணியாற்றியவர் காலின் பவல்.
1991-இல் ஈராக் குவைத் நாட்டைக் கைப்பற்ற முற்பட்டதால் ஏற்பட்ட வளைகுடாப் போரை சிறப்பாக வழிநடத்தியதால் அவர் அமெரிக்காவில் புகழ் பெற்றார். அடுத்த அதிபராக – அதிலும் முதல் கறுப்பின அதிபராகும் தகுதியைக் கொண்டவர் என்ற அளவுக்கு அவர் பிரபலமானார்.
ஆனால், அவர் ஏனோ அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடவில்லை.
எனினும் 2003-இல் ஈராக்கிற்கு எதிரான போரில் அவர் தவறான தகவல்களை வழங்கினார் என்ற அளவில் அவர் மீதான களங்கம் இறுதி வரை நீடித்தது.
ஜமைக்கா நாட்டிலிருந்து குடியேறிய மூதாதையரைக் கொண்ட காலின் பவல், 2000-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் பதவி என்பது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கு நிகரான பதவியாகும்.