Home உலகம் பூப்பந்து : சீனாவின் ஆதிக்கத்தை 19 ஆண்டுகளுக்குப் பின் முறியடித்த இந்தோனிசியா

பூப்பந்து : சீனாவின் ஆதிக்கத்தை 19 ஆண்டுகளுக்குப் பின் முறியடித்த இந்தோனிசியா

722
0
SHARE
Ad

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : டென்மார்க்கில் நடைபெற்ற (ஆண்களுக்கான) தோமஸ் கிண்ணப் பூப்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டத்தில் இந்தோனிசியா சீனாவைத் தோற்கடித்து தோமஸ் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இதன் மூலம் தோமஸ் கிண்ணப் போட்டியில் கடந்த 19 ஆண்டுகளாக சீனா செலுத்தி வந்த ஆதிக்கத்தை இந்தோனிசியா முதன் முறையாக முறியடித்திருக்கிறது.

2002-ஆம் ஆண்டில் சீனாவின் குவோங்சாவ் நகரில் நடைபெற்ற தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் ஆகக் கடைசியாக இந்தோனிசியா மலேசியாவைத் தோற்கடித்து தோமஸ் கிண்ணத்தை வெற்றி கொண்டது. ஆனால் அதற்குப் பின்னர் நடைபெற்ற எல்லா தோமஸ் கிண்ண ஆட்டங்களிலும் பெரும்பாலும் சீனாவே வெற்றி வாகை சூடி கிண்ணத்தைக் கைப்பற்றி வந்தது.

#TamilSchoolmychoice

இந்தோனிசியா தோமஸ் கிண்ணத்தைக் கைப்பற்றுவது இது 14-வது முறையாகும்.

சீனாவிடம் இறுதி ஆட்டத்தில் 2010-ஆம் ஆண்டில் தோல்வியடைந்த இந்தோனிசியா, 2016-ஆம் ஆண்டில் இறுதி ஆட்டத்தில் டென்மார்க்கிடம் தோல்வியடைந்தது.

நேற்று நடைபெற்ற முதல் 3 ஆட்டங்களிலும் இந்தோனிசியா வெற்றி வாகை சூடியது. முதல் இரண்டு ஒற்றையர் ஆட்டத்திலும், மூன்றாவதாக நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்திலும் இந்தோனிசியா வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 3-0 என்ற நிலையில் இந்தோனிசியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 2012 முதல் தொடர்ந்து ஒவ்வொரு தோமஸ் கிண்ணப் போட்டியிலும் சீனாவே வெற்றி பெற்று வந்திருக்கிறது. இப்போதுதான் முதன் முறையாக இந்தோனிசியா அதன் ஆதிக்கத்தை முறியடித்திருக்கிறது.