Home இந்தியா விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

1056
0
SHARE
Ad
விஜயபாஸ்கர் (அதிமுக – முன்னாள் சுகாதார அமைச்சர்)

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணைகள், புலனாய்வுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அந்த வரிசையில் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) காலை முதல் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய பல இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர்.

சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை வேட்டைகள் நடத்தப்படுகின்றன.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னரும், அதிமுக ஆட்சிக் காலத்தின்போதே வருமான வரித் துறை, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை வேட்டைகளை நடத்தியிருக்கிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal