வாஷிங்டன் : முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் எத்தனையோ கருத்துகளும் பதிவுகளும், பல முறை சமூக ஊடகமான டுவிட்டரால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து தற்போது தனது ஆதரவாளர்கள் சார்பில் Truth Social என்ற புதிய சமூக ஊடகம் ஒன்றை டிரம்ப் தொடக்கவிருக்கிறார்.
இதற்கு அவர் டுரூத் சோஷியல் எனப் பெயர் வைத்திருக்கிறார்.
டுவிட்டர் போன்ற உள்ளடக்கம், வடிவமைப்புடன் இந்தப் புதிய சமூக ஊடகம் திகழுமென எதிர்பார்க்கப்படுகிறது.
“Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal