Home 13வது பொதுத் தேர்தல் என் தந்தை வழி நடப்பேன் – கஸ்தூரி பட்டு பிரச்சாரம்

என் தந்தை வழி நடப்பேன் – கஸ்தூரி பட்டு பிரச்சாரம்

648
0
SHARE
Ad

Kasturi-Pattoo-Sliderஏப்ரல் 23 – ஜசெக தளபதிகளில் ஒருவரும் பாகான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அமரர் பி.பட்டுவின் மகள் கஸ்தூரி பினாங்கு, பத்துகவான்  நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தனது தந்தையின் வழியில் சமூகநீதிப் போராட்டத்தை தொடருவேன் என்று அவர் கூறினார். பத்துகவான் நாடாளுமன்றத் தொகுதியில் சூறாவளி பயணம் மேற்கொண்ட கஸ்தூரி பிரச்சாரத்தின் போது, அதிக காலங்கள் ஆட்சியில் இருக்கும் தேசிய முன்னணி அரசாங்கம் பல தவறுகளை செய்து வருகிறது.

நாட்டின் நிலைத்தன்மையையும், சமநிலையையும் உறுதி செய்வதோடு,  அனைத்து மக்களுக்கும் தேவையான உரிமைகள் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத்தேர்தலில் பினாங்கு மாநிலத்தை மக்கள் கூட்டணி கைப்பற்றியதால் தூய்மையாக ஆட்சியை கடந்த 5 ஆண்டுகளில்  பினாங்கு மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆதலால் இம்முறை பொதுத்தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் மகத்தான வெற்றியை மக்கள் கூட்டணிக்கு வழங்குமாறும் கஸ்தூரி பட்டு கேட்டுக் கொண்டார்.

புக்கிட் காசிங்கிலிருந்து பத்து கவானுக்கு மாற்றம்

முன்னதாக, பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதியின் கீழ் வரும் புக்கிட் காசிங் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கஸ்தூரி, இறுதி நேர மாற்றமாக முன்பு பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமி வென்ற பத்து கவான் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பன்மொழித் திறனும், மேடைகளில் தமிழ் மொழியில் சிறப்பாக பேசும் பேச்சாளர்களில் ஒருவராகவும் ஜசெக கட்சியில் முக்கிய தலைவராக வலம் வந்த பி.பட்டு 1974ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில், சுங்கை சிப்புட் தொகுதியில், அப்போது அங்கு  முதன் முறையாகப் போட்டியிட்ட சாமிவேலுவிடம் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் மெங்கிளம்பு (பேராக்) தொகுதியில் ஜசெக நாடாளுமன்ற வேட்பாளராக வென்று நாடாளுமன்றத்தில் கர்ஜனைக் குரல் எழுப்பும் இந்தியத் தலைவராக உயர்ந்தார்.

இன்று, அவர் வழியில் அதே கட்சியின் வழி அரசியலில் குதித்திருக்கும் கஸ்தூரி சுலபமாக பத்து கவான் தொகுதியில் வென்று நாடாளுமன்றத்தில் முழங்கும் மற்றொரு இந்தியப் பெண் குரலாக பரிணமிப்பார் என நம்பலாம்.