Home நாடு மஇகா தேசியப் பொதுப் பேரவை ஒத்திவைப்பு

மஇகா தேசியப் பொதுப் பேரவை ஒத்திவைப்பு

900
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் நவம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருந்த மஇகா தேசியப் பொதுப் பேரவை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் அறிவித்தார்.

கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. இதற்கான வாக்களிப்பு எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும். ஒவ்வொரு தொகுதியிலும் அன்றைய தேர்தலில் பேராளர்கள் வாக்களிப்பர்.

அதைத் தொடர்ந்து நவம்பர் 28-ஆம் தேதி தேசியப் பொதுப் பேரவை நடைபெறுவதாக இருந்தது. அந்தப் பொதுப் பேரவை தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு இடப் பிரச்சனையே முக்கியக் காரணம் என்றும் அசோஜன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உத்தேசமாக, மஇகா பொதுப் பேரவை எதிர்வரும் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அதற்குரிய இடம் உறுதிப்படுத்தப்பட்டதும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அசோஜன் மேலும் தெரிவித்தார்.