Home இந்தியா ஆடு திருட்டைத் தடுக்கச் சென்ற காவல் அதிகாரி வெட்டிக் கொலை – 1 கோடி ரூபாய்...

ஆடு திருட்டைத் தடுக்கச் சென்ற காவல் அதிகாரி வெட்டிக் கொலை – 1 கோடி ரூபாய் ஸ்டாலின் வழங்கினார்

641
0
SHARE
Ad

சென்னை : இரவு நேரம் ரோந்து பணியில், ஆடு திருட்டை தடுக்கச் சென்ற, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் – நாவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டச் செய்தி, சினிமாக் காட்சி போன்று தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார்.

அவரது குடும்பத்தினருக்கு, அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.