Home நாடு மலாக்கா : “பெர்சாத்து கட்சி விலகியதே பக்காத்தான் தோல்விக்குக் காரணம்” – முகமட் சாபு

மலாக்கா : “பெர்சாத்து கட்சி விலகியதே பக்காத்தான் தோல்விக்குக் காரணம்” – முகமட் சாபு

646
0
SHARE
Ad
முகமட் சாபு – அமானா கட்சியின் தேசியத் தலைவர்

மலாக்கா : நடந்து முடிந்திருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் ஒவ்வொரு கருத்தை விதைத்திருக்கின்றன.

அவர்களில் அமானா தலைவர் முகமட் சாபு,  தெரிவித்திருக்கும் சில முக்கியக் கருத்துகளைப் பார்ப்போம்.

“பெர்சாத்து கட்சி பக்காத்தான் ராயாட் கூட்டணியில் இருந்து விலகியதுதான், பக்காத்தான், மலாக்கா தேர்தலில் கணிசமான வாக்குகளை இழந்ததற்கான காரணம். 2018 பொதுத் தேர்தலில் கணிசமான மலாய் வாக்குகளை பெர்சாத்து பெற்றுத் தந்தது. இந்த முறை பெர்சாத்து, பாஸ், கெராக்கான் இணைந்த கூட்டணி மலாக்கா தேர்தலில் 77,731 வாக்குகளைப் பெற்றன. இதில் 33,161 வாக்குகளை பெர்சாத்து கொண்டு வந்தது. 2018 பொதுத் தேர்தல் வாக்கு நிலவரங்களை வைத்துப் பார்க்கும்போது, பாஸ் கட்சி உத்தேசமாக 44,570 வாக்குகளை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்குப் பெற்றுத் தந்திருக்கும். எனவே, இந்த முறை மலாக்கா தேர்தலில் பக்காத்தான் பெற்ற 114,457 வாக்குகளை பெர்சாத்து கட்சியின் வாக்குகளோடு இணைத்தால் 147,457 மொத்த வாக்குகளை பக்காத்தான் பெற்றிருக்கும். ஆனால், தேசிய முன்னணி மலாக்கா தேர்தலில் 122,471 மொத்த வாக்குகளை மட்டுமே பெற்றது. எனவே, மொகிதின் யாசின், அவரின் குழுவினரின் துரோகத் தனத்தால்தான் – இந்த முறை பெர்சாத்து வாக்குளைப் பிளவுபடுத்தியதால்தான் – பக்காத்தான் தோல்வியடைய நேர்ந்தது” எனக் கூறியிருக்கிறார், அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு.