Home கலை உலகம் கமல்ஹாசன் மருத்துவமனையில்! கொரொனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டார்

கமல்ஹாசன் மருத்துவமனையில்! கொரொனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டார்

677
0
SHARE
Ad

சென்னை : நடிகரும் மக்கள் நீதிமய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

வார இறுதியில் கமல் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம். இதற்கான படப்பிடிப்பும் முன்கூட்டியே நடத்தப்படும். தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வார இறுதியில் அவர் கலந்து கொள்ளும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடத்தப்படுமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.