Home நாடு மஇகா : உதவித் தலைவர்களாக டி.மோகன்-டி.முருகையா-எம்.அசோஜன் வெற்றி – அதிகாரபூர்வமற்ற தகவல்

மஇகா : உதவித் தலைவர்களாக டி.மோகன்-டி.முருகையா-எம்.அசோஜன் வெற்றி – அதிகாரபூர்வமற்ற தகவல்

649
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) நடந்தேறிய மஇகாவின் கட்சித் தேர்தல்களில் மூன்று உதவித் தலைவர்களாக டத்தோ டி.மோகன், டத்தோ டி.முருகையா டத்தோ எம்.அசோஜன்,ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 உதவித் தலைவர்கள் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டனர். நடப்பு உதவித் தலைவர்களாக கடந்த 2018 கட்சித் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் டத்தோ டி.மோகன், டத்தோ டி.முருகையா, டத்தோ சிவராஜ் ஆகிய மூவராவர். இவர்கள் நேற்று நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டனர்.

இவர்களைத் தவிர, நடப்பு தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன், கூட்டரசுப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.கே.இராமலிங்கம், சிப்பாங் தொகுதித் தலைவரும் மஇகா தகவல் பிரிவுத் தலைவருமான குணாளன் ஆகிய மூவரும் போட்டியிட்டனர்.

#TamilSchoolmychoice

போட்டியிட்ட அறுவரில் மிக அதிகமான வாக்குகள் பெற்று முதலாவது நிலையில் டி.மோகன் வெற்றி பெற்றார். இரண்டாவது நிலையில் மிக அதிகமான வாக்குகளுடன் டி.முருகையா வெற்றி பெற்றார். மூன்றாவது நிலையில் எம்.அசோஜன் வெற்றி பெற்றார். இந்த அதிகாரபூர்வமற்ற தகவல்களை மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

நடப்பு உதவித் தலைவர் சிவராஜ் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

மஇகா தேர்தல் முடிவுகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று சனிக்கிழமை (நவம்பர் 27) நண்பகல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.