Home நாடு மஸ்லீ மாலிக் பிகேஆர் கட்சியில் இணைகிறார்

மஸ்லீ மாலிக் பிகேஆர் கட்சியில் இணைகிறார்

962
0
SHARE
Ad

சிம்பாங் ரெங்கம் : ஜோகூர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக பெர்சாத்து கட்சியின் வழி பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பில் 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர் மாஸ்லீ மாலிக்.

அதன் பின்னர் பெர்சாத்து கட்சியிலிருந்து  விலகினார். மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானுடன் இணைந்து சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.

அவர் சைட் சாதிக்கின் மூடா கட்சியில் இணைவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் மூடா கட்சியின் பதிவு இன்னும் கிடைக்கவில்லை.

#TamilSchoolmychoice

இன்று சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிம்பாங் ரெங்கம் தொகுதியில் உள்ள மாச்சாப் வட்டாரத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்னிலையில் மஸ்லீ மாலிக் பிகேஆர் கட்சியில் அதிகாரபூர்வமாக இணயும் அறிவிப்பை வெளியிடுவார்.