Home நாடு மஇகா தேர்தல்கள் : வாக்குகள் எண்ணப்படுகின்றன

மஇகா தேர்தல்கள் : வாக்குகள் எண்ணப்படுகின்றன

659
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மஇகாவின் கட்சித் தேர்தல்கள் இன்று நாடு முழுமையிலும் நடந்தேறின. ஒவ்வொரு தொகுதியில் தேர்தலுக்கான வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை வாக்களிப்பு நடைபெற்றது.

தொகுதிகளின் வாக்களிப்பு மையங்களை மஇகா தலைமையகத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் நிர்வகித்து, தேர்தல்களை நடத்தினர்.

ஒவ்வொரு மாநில அளவிலும் 10 பொறுப்பாளர்கள், 21 மத்திய செயலவை உறுப்பினர்கள், 3 உதவித் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

3 உதவித் தலைவர்கள் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டனர். நடப்பு உதவித் தலைவர்களாக தற்போது இருப்பவர்கள் டத்தோ டி.மோகன், டத்தோ டி.முருகையா, டத்தோ சிவராஜ் ஆகிய மூவராவர்.

இன்று நடைபெற்ற தேர்தலில் நடப்பு தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன், கூட்டரசுப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.கே.இராமலிங்கம், சிப்பாங் தொகுதித் தலைவரும் மஇகா தகவல் பிரிவுத் தலைவருமான குணாளன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மஇகா மத்திய செயலவைக்கு 60 பேர் வேட்புமனுத் தாக்ககல் செய்திருந்தனர். இறுதியில் பலர் தங்களின் வேட்புமனுத் தாக்கலை மீட்டுக் கொண்டனர்.

வாக்களிப்பு முடிந்ததும், வாக்குகள் தொகுதியிலேயே எண்ணப்பட்டு அதன் முடிவுகள் மஇகா தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை (நவம்பர் 27) அதிகாலைக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.