Home கலை உலகம் கல்யாணம் 2 காதல் – சீசன் 2 கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

கல்யாணம் 2 காதல் – சீசன் 2 கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

693
0
SHARE
Ad

கல்யாணம் 2 காதல் சீசன் 2 நடிகர்கள் மற்றும் குழுவினருடனான ஒரு சிறப்பு நேர்காணல்

கார்த்திக் ஷாமலன், இயக்குநர்:

1. கல்யாணம் 2 காதல் சீசன் 2 மூலம் இரசிகர்கள் எதை எதிர்பார்க்கலாம்?

#TamilSchoolmychoice

இந்தச் சீசன் கல்யாணம் 2 காதல் கதையின் முடிவைப் பற்றியது. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். இந்தச் சீசன் கிராபிக்ஸ் கூறுகளுடன் 8000-க்கும் மேற்பட்டக் காட்சிகளுடன் வெளிவந்தது. முதல் சீசனுக்கு ஏற்றவாறு இந்தச் சீசனில் சர்வதேச அமைப்புகளுடன் மூன்று பெரியப் படப்பிடிப்பு இடங்களை நாங்கள் உருவாக்கினோம். இரசிகர்களுக்காக முழு ஈடுபாடும் உணர்ச்சியும் நிறைந்த ரோலர் கோஸ்டர் சவாரியை நாங்கள் தயார் செய்திருப்பதால், இந்தத் தொடரை இரசிகர்கள் இரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

கார்த்திக் ஷாமலன்

2. இந்த இரண்டாவதுச் சீசனை இயக்கிய உங்களின் அனுபவம் எவ்வாறு வித்தியாசமாக இருந்தது?

தயாரிப்பு மற்றும் தரைப் பணிகள் உட்பட இரண்டாவது சீசனில் அதிக வேலைகள் இருந்தன. அதுமட்டுமின்றி, சீசன் 2-இன் திரைக்கதை மிகவும் தீவிரமாக இருந்ததால் இரசிகர்களைக் கவர்ந்திழுக்க அதிகச் செயல் திறன்களைக் கொண்ட வேலைகளை மேற்க்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட அதிகமானப் படப்பிடிப்பு இடங்கள் மற்றும் நேரம் தேவைப்பட்டன.

3. இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

காட்சி விளைவுகள் (visual effects), திரைக்கதை (screen writing) மற்றும் சக்திவாய்ந்த படைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் வரவிருக்கும் தயாரிப்புகளுக்கு ஓர் அளவுகோலாகக் கல்யாணம் 2 காதல் சீசன் 2 அமையும் என்று நான் நம்புகிறேன். இரசிகர்கள் எங்கள் தொடரை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். எனவே, இது மேலும் வரவிருக்கும் தொடர்ச்சிகள் சார்ந்தத் தொடர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

மகேந்திரன் ராமன், யுவராஜ் கிருஷ்ணசாமி, மலர்மேனி பெருமாள் & பாஷினி சிவகுமார், நடிகர்கள்:

1. கல்யாணம் 2 காதல் சீசன் 2 -இல் நீங்கள் நடித்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கூறுக?

மகேந்திரன் ராமன்

மகேந்திரன்: கல்யாணம் 2 காதல் சீசன் 2-இல் சாமிநாதன், ஹரிஷ், பாக்கியநாதன் என மூன்று வித்தியாசமானக் கதாப்பாத்திரங்களில் நடித்தேன். சீசன் 2-இல், நான் பெரும்பாலாகப் பாக்கியநாதன் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். தன் மனைவியின் நலனுக்காகத் தன் வாழ்வையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஓர் அன்பான கணவர், பாக்கியநாதன். அவர் தன் நினைவுகளை மறந்து விட்டார். ஹரிஷ் மற்றும் விக்கியின் உதவியுடன் அவற்றை நினைவுப்படுத்துகிறார்.

யுவராஜ்: நான் ஹரிஷ் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். பல்கலைக்கழகத்தில் ஹரிஷின் முதல் காதலானச் சௌமியாவுடனானக் கடந்தக் காலம் மற்றும் எதிர்கால உறவுகளை முழுக் கதைக்களமும் சித்தரிக்கிறது.

யுவராஜ் கிருஷ்ணசாமி

இது எனக்கு எளிதான, பொருத்தமான மற்றும் எளிதில் உருவாக்கப்பட்டக் கதாப்பாத்திரமாக இருந்தாலும் கார்த்திக் ஷாமலன் வித்தியாசமான யோசனைகளைக் கொண்டிருந்தார். இந்தத் தொடரில் நடித்த மிகவும் சிக்கலானக் கதாப்பாத்திரங்களில் ஒன்றாக எனது கதாப்பாத்திரம் மாறியது.

ஏனெனில், மற்றக் கதாப்பாத்திரங்களுக்கும் ஹரிஷுக்கும் இடையில் இருக்கும் உணர்ச்சிகள் ஒருவருக்கொருவர் வேறுபட்டன. சிக்கல்கள் இருந்த போதிலும், எனக்குள் பயணித்த ஹரிஷை நான் மிகவும் இரசித்தேன். இயக்குநருக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும் என்பதுப் பற்றியத் தெளிவான நோக்கம் இருந்தது. அதற்கு ஏற்ப, அவருடையத் துல்லியமான வழிகாட்டுதலின்படி நான் எனதுப் படைப்பைச் சிறப்பாக வழங்கினேன் என்று நம்புகிறேன்.

மலர்மேனி: எனதுக் கதாப்பாத்திரத்தின் பெயர் மியா. அவர் தனது கடந்தக் காலத்தை மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றார். சீசன் 2-இல், மியா உணர்வு ரீதியாக அதிக அளவில் பாதிக்கப்படுகிறார். அவர் வாழ்க்கையில் எதையாவதுப் பெறுவதற்கு நெருக்கம் உட்படச் சில முக்கியக் கூறுகளை இழக்க வேண்டும்.

எனவே, அவரைச் சுற்றியுள்ளவற்றைப் புரிந்துக் கொள்வதில் இது சவாலை விளைவிக்கிறது. கதைத் தீவிரமடைகையில், மியா தன்னைத்தானே கேள்வி கேட்கத் தொடங்குகிறார். மேலும், துன்பங்கள் இருந்தபோதிலும் தனது மகிழ்ச்சியைக் கண்டுப்பிடிப்பதில் உறுதியாக இருக்கிறார். வாழ்க்கையில் தனதுக் காதலுடன் உணர்வுபூர்வமாக இணைக்கப்படும் ஒரு வலுவான மற்றும் தைரியமானக் கதாப்பாத்திரம்.

பாஷினி: நான் சௌமியாவாக நடித்தேன். திக்கிப் பேசும் கூச்சச் சுபாவமுடைய ஒரு பெண். அவர் ஒரு கடினமானக் குழந்தைப் பருவத்தை எதிர்கொண்டுள்ளார். ஒரு காலக்கட்டத்தில், அவர் மேற்படிப்பைப் பல்கலைக்கழகத்தில் தொடர முடிவு செய்கிறார். அங்கு காதல் வயப்படுகிறார்.

பாஷினி

நிச்சயமாக, இது ஓர் உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டர் சவாரியாகத்தான் இருக்கும். இது ஓர் அறிவியல் புனைகதை மற்றும் நேரப் பயணத்தை உள்ளடக்கியத் தொடர் என்பதால், உணர்ச்சிகளும் பயணிக்கின்றன! இதுவரை நான் நடித்தக் கதாப்பாத்திரங்களுக்கு மத்தியில் இது எனக்கு மிகவும் விருப்பமான ஒரு கதாப்பாத்திரம். சௌமியாவுடன் எனக்கு ஒரு வலுவான மற்றும் உணர்வுபூர்வமானத் தொடர்பு உள்ளது.

2. இந்தச் சீசனில் நடித்ததில் நீங்கள் கற்றுக்கொண்ட சில பயனுள்ள விஷயங்கள் யாவை?

மகேந்திரன்: எனது முந்தையத் திரைப்படங்களில் இயக்குநர்கள், எனது நடிப்பை ஏற்றுக் கொண்டனர். இருப்பினும், கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற எனது நடிப்பை வெளிக்கொணரக் கார்த்திக் என்னை ஊக்குவித்தார். மேலும், அவருடைய எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாறு எனதுச் சிறந்தப் படைப்பை வெளிக்கொணர்ந்தார். இந்தச் சீசனில் அதிக உணர்ச்சிகரமான ஆளுமைத் தேவைப்பட்டது. நான் உணர்ச்சிகரமான நபர் அல்ல. எனவே, உணர்ச்சிகரமானக் கூறுகளைச் சித்தரிக்க எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

யுவராஜ்: சீசன் 1 மற்றும் சீசன் 2 தயாரிப்பிற்கு இடையே இடைவேளை இருந்ததால் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைச் செவ்வெனக் கொண்டுச் செல்வது ஒரு கடினமான மற்றும் மகத்தானப் பணியானது. எல்லாக் கதாப்பாத்திரங்களும் மாற்றத்தின் உச்சத்தை கொண்டிருந்தன. ஹரிஷின் தீவிரத்தையும் பதற்றத்தையும் சீசன் 2 மூன்று மடங்கு அதிகரித்தது.

எனவே, சீசன் 2-இன் படப்பிடிப்பிற்க்குக் கால் எடுத்து வைப்பதற்கு முன் சில பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனது காட்சிகளின் போதுத் தினசரி அடிப்படையிலும் முன்னதாகவும், இயக்குநரிடமிருந்து வடிவமைப்பை நான் ஆழமாகக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. கல்யாணம் 2 காதல் கதை ஒரு முடிவுக்கு வருவதால் சீசன் 2-க்கு அதிகமானக் வாய்ப்பு இருந்தது.

மலர்மேனி: நான் நடித்தக் கதாப்பாத்திரம் தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியச் சிறந்தப் புரிதலை எனக்கு அளித்தது. சீசன் 1 தீர்க்கப்படாதச் சிக்கல்களைத் தீர்த்தது. அதே சமயம், சீசன் 2 முடிவைக் கொடுத்தது.

மலர்மேனி பெருமாள்

நாம் சித்தரிக்கும் சிலக் கதாப்பாத்திரங்கள் வாழ்க்கையின் வெவ்வேறுக் கண்ணோட்டத்தையும் அதன் நோக்கத்தையும் உணர உதவும் என்பதை நான் அறிந்தேன். நடிப்பில் சித்தரிக்கப்பட்டக் கதாப்பாத்திரம் நிஜ வாழ்க்கையில் துன்பங்களைச் சமாளிப்பதற்கான நம்பிக்கையைத் தரும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். விதி மற்றும் பிரபஞ்சம் மீதான நமது நம்பிக்கையின் அளவும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

பாஷினி: மனதளவிலும் தன்னை கொண்டுச் செல்லும் விதத்திலும் சௌமியாவுக்கு சீசன் 2-இல் 4 வெவ்வேறுக் கட்டங்கள் உள்ளன. அவர் மகிழ்ச்சியாக, உற்சாகமாகச், சோர்வாகக், குழப்பமாக மற்றும் அதீத மன அழுத்தத்துடன் உள்ளார். மேலும், அவர் நேசிக்கப்படுவதோடு அவரும் நேசிக்கிறார்.

எனதுச் சிறந்த நடிப்புத் திறமையை வெளிக்கொணர இயக்குநர் கார்த்திக் ஷாமலன் போன்ற ஒரு நடிப்பு குரு தேவை! ‘என்ன நடந்தது’, ‘என்ன நடக்கப் போகிறது’ என்றுத் தெளிவாக விளக்கிக் கூறி, ‘என்ன நடக்கிறது’ என்பதைச் செவ்வென நடிக்கச் செய்வார். ஒவ்வொரு வரியையும், செயலையும் மனதளவில் அறிந்துக் கொள்வது உட்பட ஸ்கிரிப்டை முழுவதுமாக அறிந்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை அறிந்துக்கொண்டேன்.

இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. ‘சௌமியா’ எங்கோ வாழும் ஓர் உண்மையான நபர் என்றும் நான் அவரது கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் நான் எப்பொழுதும் எனக்கு நினைவூட்டிக் கொள்வேன்!