Home கலை உலகம் “அந்த நாள்” – வரலாற்று ஆவணப்படக் கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

“அந்த நாள்” – வரலாற்று ஆவணப்படக் கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

883
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பாகி வரும் “அந்த நாள்” என்ற வரலாற்று ஆவணப் படத் தொடர் பரவலான வரவேற்பை தொலைக்காட்சி இரசிகர்களிடையே பெற்றிருக்கிறது.

“அந்த நாள்” –  தொடரின் கலைஞர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் :

அந்த நாள் – மாறன் பெரியானன், இயக்குநர்:

மாறன் பெரியானன்

வரலாற்றில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது. அதுமட்டுமின்றி, நிகழ்காலத்தில் நம் வாழ்க்கை எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதிலும் ஆர்வம் இருந்தது. கடந்தக் கால நிகழ்வுகளை நான் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது, அவை பல்வேறுச் சிறு நிகழ்வுகளுடன் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை அறிந்தேன். இது என்னைக் கவர்ந்தது. எனவே, இந்தக் கதைகளைச் சொல்ல வேண்டும் என்று நான் எண்ணினேன்.

#TamilSchoolmychoice

அந்த நாள் ஆவணப்படத்தில் இரசிகர்கள் எதை எதிர்பார்க்கலாம் என்று கூறுங்கள்?

நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்களின் தனிப்பட்டப் பயணக் கதைகளை அந்த நாள் ஆவணப்படத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் சித்தரிக்கின்றது. அவர்களின் சுய வார்த்தைகளையும் உணர்ச்சிகளையும் உள்ளடக்கியக் கதைகளைக் கேட்பதை ஒரு பாக்கியமாக உணர்கிறேன். அதுதான் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். அதுமட்டுமின்றி, வரலாற்றுக் காட்சிகள் மற்றும் படங்கள் மூலம் வரலாற்றில் தங்களை மூழ்கடிக்கும் ஓர் அரிய வாய்ப்பை இரசிகர்கள் பெறுவர். அவற்றில் சில நிகழ்வுகள் அவை நடைபெற்றக் காலவரிசைக்கு இரசிகர்களை அழைத்துச் செல்லும்.

அந்த நாள் ஆவணப்படத்தை இயக்கிய உங்களின் அனுபவம் எவ்வாறு இருந்தது?

தனிப்பட்ட முறையில் அந்த நாள் ஆவணப்படத்தை இயக்கியது எனக்குச் சற்று உணர்ச்சிகரமானது என்றுதான் கூறுவேன். நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டியப் பலர் இறந்து விட்டனர். அவர்களின் கதைகளைத் திரையிட முடியாமல் போனது எனக்கு வருத்தத்தை அளித்தது. அனைத்து வரம்புகளுக்கும் அப்பாற்ப்பட்டு இந்தக் கதைகளை ஆவணப்படமாக வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கதைகளை மக்களுக்குக் கொண்டுச் செல்ல எனக்குச் சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக ஃபினாஸ் மற்றும் ஆஸ்ட்ரோவுக்கு நான் நன்றிக் கூற விரும்புகிறேன்.

இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

வரலாற்றின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்களைத் தொடங்க அந்த நாள் ஆவணப்படம் ஒரு பிள்ளையார் சுழியாக இருக்கும் என்று நம்புகிறேன். பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையிலான மிக அடிப்படையான உரையாடல் கூட நன்றாக இருக்கும். நமது நிகழ்காலத்தை ஒரு சிறந்தச் சூழலில் புரிந்துகொள்ள நாம் நமது கடந்த காலத்தை அறிந்துக் கொள்ள வேண்டும். இது, எதிர்காலத்திற்கு நம்மைத் தயார்ப்படுத்தும்.

கபிலன் கந்தசாமி, தொகுப்பாளர்:

அந்த நாள் ஆவணப்படத்தைத் தொகுத்து வழங்கிய உங்களின் அனுபவம் எவ்வாறு இருந்தது?

கபிலன் கந்தசாமி

நான் தொகுத்து வழங்கிய அனுபவத்தை முழுமையாக இரசித்தேன். தொகுத்து வழங்குவது எனக்குப் “புதிய” அனுபவம் என்பதால் குழுவிலிருந்து எனக்குச் சிறந்த வழிகாட்டுதலும் உதவியும் கிடைத்தது.

தமிழ் ஆசிரியர்கள், உச்சரிப்பு வழிகாட்டிகள், நடிப்புப் பயிற்சியாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் என பலர் எனக்குப் படப்பிடிப்பு இடத்தில் உதவினர் – பாராட்டுகள் அனைத்தும் அனுபவம் வாய்ந்தத் தயாரிப்புக் குழுவினரைச் சாரும்.

ஆவணப்படம் ஒரு தீவிரமான விஷயமாக இருந்தது. ஆனால், ஒரு பத்திரிகையாளர் மற்றும் வரலாற்று ஆர்வலராக இருந்ததால், நான் ஆவணப்படம், நேர்காணல்களை மேற்கொண்டது, பலத் தளங்களைப் பார்வையிட்டது ஆகியவற்றை இரசித்தேன். இந்த ஆவணப்படத்தை உருவாக்கும் தருணத்தில் நமது வரலாற்றைப் பற்றியப் பலப் புதிய விஷயங்களையும் நான் கற்றுக்கொண்டேன். சில நேரங்களில் கடுமையான வானிலை மற்றும் பிறத் தனிப்பட்டச் சூழ்நிலைகளில் நாங்கள் நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பை நடத்தினோம். அவையனைத்தும் பயனளித்தது. இந்த அற்புதமான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதைச் சாத்தியமாக்கிய மாறன், Far East Documentary Center Sdn Bhd, ஃபினாஸ் மற்றும் ஆஸ்ட்ரோ ஆகியோருக்கு நன்றிக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

அந்த நாள் ஆவணப்படத்தைத் தொகுத்து வழங்கிய உங்களின் மறக்கமுடியாதச் சிலத் தருணங்களைப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

தேர்வுச் செய்யப் பல விஷயங்கள் இருந்தன. பினாங்கில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது, ஒரு பார்வையாளர் எனதுச் “செயல்திறனைக்” கவனித்துக் கொண்டிருந்தார், ஒவ்வொரு முறையும் நான் தடுமாறும்போது, அவர் என்னை உற்சாகப்படுத்தினார். இறுதிப் படப்பிடிப்பிற்கு பிறகு, அவர் கைகளைத் தட்டினார். எனவே வெளிப்படையாக, நான் அவருடையப் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றேன்!

இதேபோல் கோத்தா பாருவில், ஒருவர் என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளப் படப்பிடிப்பு இடத்தைச் சுற்றி நடந்துக் கொண்டிருந்தார். நான் ஒளிப்பதிவுக் கருவியுடன் எவ்வாறு உரையாடுகிறேன், ப்ராம்ப்டர் எவ்வாறு வேலைச் செய்கிறது என்பதை அறிந்துக்கொள்ள அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார்!

படப்பிடிப்பு முடிந்ததும், கூர்ந்துப் பார்க்க அவரை அழைத்தோம். வானிலையும் முக்கியப் பங்காற்றியது. பினாங்கில் எங்களின் படப்பிடிப்பின் போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், படப்பிடிப்பைத் நடத்தச் சூரிய ஒளிக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. மற்ற நேரங்களில், நம்பமுடியாத அளவிற்கு வெயிலாகவும், வெப்பமாகவும் இருந்தது. இதனால் எங்கள் அனைவருக்கும் அதிக வியர்வை ஏற்பட்டது. ஆனால் இயக்குநர் என் சட்டை உலர்ந்தும், என் முகம் புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று விரும்பினார்! கல்வியாளர், நிபுணர், சாட்சியாளர், உயிர் பிழைத்தவர் உட்பட நாங்கள் நேர்காணல் செய்த ஆளுமைகள் அனைவரும் பேசப்படாத ஹீரோக்கள் என்றுதான் கூறுவேன். அவர்களின் கதைகள் அனைத்தும் பகிரப்பட வேண்டும் என்று எண்ணினேன். அந்த நாள் மூலம் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.