Home நாடு துன் மகாதீர் உடல் நலம் : முரண்பாடான தகவல்கள்

துன் மகாதீர் உடல் நலம் : முரண்பாடான தகவல்கள்

930
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை ஐஜேஎன் என்னும் தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டைக் காண வரிசையாக நாட்டின் தலைவர்களும் பிரமுகர்களும் படையெடுத்து வருகின்றனர்.

நேற்று சனிக்கிழமை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மருத்துவமனைக்கு வந்து மகாதீரின் துணைவியார் சித்தி ஹாஸ்மாவை நேரில் சந்தித்து மகாதீரின் நலம் குறித்து விசாரித்தார்.

அதைத் தொடர்ந்து இன்று மாமன்னரின் துணைவியார் ராஜா பெர்மாய்சுரி அகோங் மருத்துவமனைக்கு வந்து மகாதீரின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

#TamilSchoolmychoice

மகாதீர் தேசிய இருதய மருத்துவக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் பரவியது முதல் உள்நாட்டு, அயல் நாட்டு ஊடகவியலாளர்கள் ஐஜேஎன் முன்பாகக் குவிந்திருக்கின்றனர்.

சமூக ஊடகங்களிலும் பரபரப்பான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றன.

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமும், நஜிப் துன் ரசாக்கும் மகாதீர் நலமடைய வேண்டுமெனத் தங்களின் பிரார்த்தனைகளைத் தங்களின் சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர்.

மகாதீர் உடல்நிலை சீராக இருக்கிறது என அவரின் மகள் மரீனா மகாதீர் தெரிவித்தார்.

இருப்பினும் மகாதீரின் உடல் நலம் குறித்த முரண்பாடான தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.