Home நாடு துன் மகாதீர் மீண்டும் மருத்துவமனையில்…பரபரக்கும் மலேசிய அரசியல்!

துன் மகாதீர் மீண்டும் மருத்துவமனையில்…பரபரக்கும் மலேசிய அரசியல்!

658
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை தொடங்கி மலேசிய அரசியல் களம், பரபரப்புகளால் பற்றிக் கொண்டது.

இன்று ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என்ற ஆரூடங்கள் நிலவியதற்கு ஏற்ப மாலை 5.00 மணியளவில் சட்டமன்றக் கலைப்புக்கான ஒப்புதலில் ஜோகூர் சுல்தான் கையெழுத்திட்டார்.

இதற்கிடையில், துன் மகாதீர் தேசிய இருதய மருத்துவக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலும் பரவ, ஊடகவியலாளர்கள் ஐஜேஎன் முன்பாகக் குவியத் தொடங்கினர்.

#TamilSchoolmychoice

சமூக ஊடகங்களிலும் பரபரப்பான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பிரதமர் முதற்கொண்டு பல தலைவர்கள் ஐஜேஎன் நோக்கி விரைந்து மகாதீரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

மகாதீர் உடல்நிலை சீராக இருக்கிறது என அவரின் மகள் மரீனா மகாதீர் தெரிவித்தார்.

எனினும் ஜோகூர் மாநில சட்டமன்ற இடைத் தேர்தல் – மகாதீரின் உடல்நலக் குறைவு ஆகிய காரணங்களால் மலேசிய அரசியல் களத்தில் வெப்பம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.