Home நாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்- ராகா பண்பலை இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்- ராகா பண்பலை இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி

912
0
SHARE
Ad

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணிவிழாவை முன்னிட்டு, ராகா பண்பலையோடு இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி

இளைஞர்களை இலக்கியத்தின்பால் ஈர்க்கவும் அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் ராகா பண்பலையுடன் இணைந்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் குறுங்கதை எழுதும் போட்டியை நடத்துவதாக எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் கூறினார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு 60 ஆண்டை எட்டுவதால் இவ்வாண்டு மணிவிழா கொண்டாடப்படவிருக்கிறது. அதனை முன்னிட்டுச் சில இலக்கியப் போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மின்னல் பண்பலையுடன் இணைந்து தேசிய அளவில் சிறுகதைப் போட்டியை நடத்தி கடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

பெ.இராஜேந்திரன்
#TamilSchoolmychoice

அடுத்து, குறுங்கதைப் போட்டியை ராகா பண்பலையுடன் இணைந்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்துகிறது. இப்போட்டிக்கான கதைகளை 28.2.2022ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றார் பெ.இராஜேந்திரன்.

25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் இப்போட்டி கட்டமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை இலக்கியத்தின்பால் ஈர்க்கும் நோக்கம்தான் அதற்குக் காரணம்.

மாணவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளைச் சங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் போட்டி இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். 25 வயதுக்குட்பட்ட மாணவர்களும் போட்டியில் பங்கெடுக்க அழைப்பதாகவும் பெ.இராஜேந்திரன் சொன்னார்.

இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டவும் விதிமுறைகளை விளக்கவும் 28.1.2022ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, இரவு மணி 7.00க்கு இயங்கலையில் பயிலரங்கம் ஒன்று நடத்தப்படவிருக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொண்டால், அவர்களை உள்ளடக்கிப் புலனக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு, கருத்துப் பரிமாற்றமும் செய்யப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் 013 3609989 அல்லது 017 7008189, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

போட்டியின் விதிமுறைகள்

• சொந்தக் கற்பனையாக இருத்தல் வேண்டும்.

• இலக்கியம், சமுதாயம், குடும்பம், சிறுவர்கள் நட்பு, காதல், விழிப்புணர்வு, மர்மம், திகில் அதீத கற்பனை (fantasy) போன்ற கதையம்சங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

• நடைமுறைத் தமிழிலும், யதார்த்தமான முறையிலும், யாருடைய மனத்தையும் புண்படுத்தாதவாறு, யாரையும் மறைமுகமாகச் சாடாமல், இன, மத, ஜாதி உணர்வைத் தூண்டாதவாறு, அவமானப்படுத்தாமல் கதை அமைத்தல் அவசியம்.

• உங்களுடைய படைப்புகளைப் கால மாற்றத்திற்கு ஏற்ற புதுமையையும், இளைய தலைமுறையினரையும் கவரும் வகையிலும் எழுதினால் சிறப்பு.

• 25 வயதிற்கும் உட்பட்ட மலேசியர்கள் மட்டும் பங்கேற்கலாம்.

• கதைகள் 250 முதல் 300 வார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

• மனத்தை ஈர்க்கும் வண்ணம் கதையம்சத்தைக் கொண்டிருக்க வேண்டும். யூனி கோர்ட் எழுத்துருவில் தமிழில் தட்டச்சு செய்யப்பட்ட கதைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

• எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

• கதையின் நடை மக்களுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும்.

• எங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு முன்னர் ஒருமுறைக்கு இருமுறை படித்துவிட்டு அனுப்பவும்.

• உங்களுடைய படைப்புகள், இதற்கு முன்னர் வேறு எங்கும் வெளிவந்திருந்தால், அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பிறருடைய கதையைக் காப்பியடித்தோ அல்லது பத்திரிக்கை, வார மாத சஞ்சிகைகள், தொலைக்காட்சி , வலையொளியில் (youtube)பில் ஏற்கனவே இடம் பெற்ற மற்றவர்களின் படைப்பைத் தழுவியதாக இருப்பின் உங்கள் மீது சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அதற்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

• நீங்கள் அனுப்பும் எழுத்துப் படிவங்கள் பரிசுக்குரியதாகத் தேர்வு பெற்றால், வானொலி ஒலிபரப்பிற்கு ஏற்றவாறு/ புத்தகமாக அச்சிடுவதற்கு ஏற்ப திருத்தம் செய்ய ஏற்பாட்டாளர்களுக்கு முழு உரிமையுள்ளது.

• நடுவர்களின் முடிவே இறுதியானதும் உறுதியானதுமாகும். முடிவு தொடர்பாக தனிப்பட்ட முறையில் ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது.

• கதையோடு, தனித்தாளில் அனுப்ப வேண்டிய விவரங்கள்:

1. தேர்வு செய்யப்பட்ட கதை வானொலியில் ஒலிபரப்பப்படுவதோடு, நூல் வடிவமாகவும் வெளியிடப்படும். அதற்கு அனுமதி வழங்கும் ஒப்புதல் கடிதம்

2. முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி.

3. அடையாள அட்டை நகல்.

4. கடப்பிதழ் அளவிலான நிழல்படம் ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.

5. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: secretary.mtwa@gmail.com
பரிசுகள்:

முதல் பரிசு RM 2000.00

இரண்டாம் பரிசு RM 1000.00

மூன்றாம் பரிசு RM 500.00

20 ஆறுதல் பரிசு தலா RM 100.00