Home கலை உலகம் ஆஸ்ட்ரோவின் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஏபெக் ஸ்பெஷல்’ – மெய்நிகர் நேர்முகத் தேர்வு தொடங்கிவிட்டது

ஆஸ்ட்ரோவின் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஏபெக் ஸ்பெஷல்’ – மெய்நிகர் நேர்முகத் தேர்வு தொடங்கிவிட்டது

583
0
SHARE
Ad

இளம் நடிப்புத் திறமையாளர்களுக்கான ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஏபெக் ஸ்பெஷல்’ போட்டியின் மெய்நிகர் நேர்முகத்தேர்வுத் தற்போதுத் திறக்கப்பட்டுள்ளது

பிப்ரவரி 27, ஆஸ்ட்ரோ ஜீ தமிழ் எச்டியில் (அலைவரிசை 233) இறுதிச் சுற்று ஒளிபரப்புக் காணும்

‘ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஏபெக் ஸ்பெஷல்’ போட்டியைப் பற்றின விபரங்கள்:

  • 5 முதல் 13 வயதுக்குட்ப்பட்ட ஆர்வமுள்ள இளம் உள்ளூர் நடிப்புத் திறமையாளர்கள், இப்போது முதல் பிப்ரவரி 3, 2022 வரை ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஏபெக் ஸ்பெஷல்’ போட்டியின் மெய்நிகர் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். பிப்ரவரி 27, மாலை 6 மணிக்கு, ஆஸ்ட்ரோ ஜீ தமிழ் எச்டியில் (அலைவரிசை 223) முதல் ஒளிபரப்புக் காணும் இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டப் படைப்புகள் இடம்பெறும்.
    #TamilSchoolmychoice

  • சினேகா, செந்தில் மற்றும் சம்யுக்தா உட்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் அடங்கிய நடுவர் குழுவால் சிறந்த 5 போட்டியாளர்களின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஏபெக் ஸ்பெஷல்’ மலேசியர்கள் மற்றும் சிங்கப்பூரர்களுக்காகப் பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.
  • தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஒப்புதலுடன் ஆர்வமுள்ளப் போட்டியாளர்கள், தாங்கள் நடித்தத் திரைப்படக் காட்சிகள் அல்லது அசல் நடிப்பின் காணொளியை JSSAPAC@gmail.com எனும் மின்னஞ்சல் வழிச் சமர்ப்பிக்கலாம்.