- ஆஸ்ட்ரோ மற்றும் ராகாவில் பிப்ரவரி 14- இல் முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்.
- ரியாலிட்டி நிகழ்ச்சி ‘டும் டும் டும்’ ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியிலும் மற்றும் குறும்படம் ‘இதுதான் காதலா’ ராகாவிலும் முதல் ஒளிபரப்புக் காணுகின்றன
கோலாலம்பூர் – திங்கட்கிழமை பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் அன்பர்கள் தினத்தில், ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் “டும் டும் டும்” என்ற உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம். மேலும், அனைத்து மலேசியர்களும் இதுதான் காதலா எனும் குறும்படத்தையும் ராகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.
பிரபலப் புதுமணத் தம்பதிகளானக் கேசவன் மற்றும் பாஷினி இடம்பெறும், முதல் ஒளிபரப்புக் காணும் டும் டும் டும் என்ற உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். உள்ளூர் இயக்குநர் ராஜேந்திரன் ராஜமாணிக்கம் இயக்கிய, ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் இப்புதுமணத் தம்பதியரின் திருமணப் பயணத்தை ஆராய்வதன் மூலம் இரசிகர்களைக் கவரும்.
பிப்ரவரி 14, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் டும் டும் டும் முதல் ஒளிபரப்புக் காணுகிறது. தினமும் பிப்ரவரி 18 வரை முதல் ஒளிபரப்புக் காணும் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழுங்கள்.
“இதுதான் காதலா?”
மிரோஷா கணேசன் இயக்கிய இந்தக் கதை, தங்கள் உறவில் எதிர்க்கொள்ளும் பலப் பிரச்சனைகளைக் காதல் குருக்களின் உதவியுடன் தீர்க்கும் ஒரு ஜோடியைப் பற்றியதாகும்.
‘காதலில் ஒவ்வொருப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டு, அன்பு காட்டுவதை மட்டும் நிறுத்தாதீர்கள்’ என்ற ஆழமானக் கருத்தை இக்குறும்படத்தின் வழி இரசிகர்கள் அறிவர். பிப்ரவரி 14 முதல் 18 வரை, தினமும் காலை 9 மணிக்கு ராகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுதான் காதலா குறும்படத்தின் புதிய அத்தியாயங்கள் முதல் ஒளிபரப்புக் காணும்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.