Home இந்தியா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது

1208
0
SHARE
Ad

சென்னை : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சனிக்கிழமை இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ராயபுரம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட முற்பட்டார் என்ற காரணத்தினால், அவரை மிரட்டியதாகவும், அவரின் ஆடைகளைக் களைய முற்பட்டதாகவும் அவர் மீது காவல் துறை புகார் சுமத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.