Home கலை உலகம் ராகா அறிவிப்பாளர்கள் : அஹிலா, ரேவதி மகளிர் தின சிறப்பு நேர்காணல்

ராகா அறிவிப்பாளர்கள் : அஹிலா, ரேவதி மகளிர் தின சிறப்பு நேர்காணல்

486
0
SHARE
Ad

(மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராகா வானொலியின் மகளிர் அறிவிப்பாளர்கள் அஹிலா மற்றும் ரேவதி இருவரிடம் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல்)

  1. #பாகுப்பாட்டைத்தகர்த்தெறிக (#BreakTheBias) என்ற 2022-ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் உங்களுக்கு எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது?
ராகா அறிவிப்பாளர் அஹிலா சண்முகம்

அஹிலா: தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில் சார்ந்த வாழ்க்கையிலும் சரி, பெண்கள் தொடர்ந்துப் பாகுபாட்டை அனுபவித்து வருகின்றனர். #பாகுபாட்டைத்தகர்த்தெறிக (#BreakTheBias) எனும் இவ்வாண்டுக் கருப்பொருள் தேவையான விழிப்புணர்வையும் மாற்றத்தையும் உருவாக்கும் என்று நம்புகிறேன்.

ரேவதி: பாகுபாடு, முன் நிறுவப்பட்டக் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் (ஸ்டீரியோடைப்) மற்றும் வேறுபடுத்துதல் இல்லாத உலகம்.

  1. #பாகுப்பாட்டைத்தகர்த்தெறிக (#BreakTheBias) என்றக் கருப்பொருளை உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்த முடியுமா மற்றும் அதை நீங்கள் எவ்வாறு ஆதரிக்கிறீர்கள்?
#TamilSchoolmychoice

அஹிலா: என் வாழ்நாளில் எந்த ஒரு பாகுப்பாட்டையும் அனுபவிக்காத அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக நான் என்னைக் கருதுகிறேன். எனக்குச் சரியென்றும் சிறந்ததென்றும் நான் கருதுவதைச் செய்ய என் பெற்றோர் எப்போதும் எனக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். நான் பெண் என்பதற்காக அவர்கள் என்னை எதையும் செய்வதிலிருந்து ஒருபோதும் கட்டுப்படுத்தவில்லை. அதேப்போல்தான் என் கணவரும். அவர் பெண்கள் சுய காலில் நிற்க்க வேண்டும் என்றும் தங்களதுத் துணையை அதிகம் சார்ந்திருக்காமல் தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் நம்புகிறார். எனதுப் பணியிடத்திலும் எனக்குச் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ராகா அறிவிப்பாளர் ரேவதி

ரேவதி: என் வாழ்வில் பாகுபாட்டைச் சந்தித்தாலும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் எனக்கானப் பாதையை நான் சுயமாக உருவாக்கினேன். நான் எப்போதும் ஒரு வலிமையானப் பெண்ணாக இருக்க முடிவுச் செய்தேன்.

  1. இவ்வாண்டுக் கருப்பொருளுக்கு ஏற்றவாறு வாழ உங்களை ஊக்குவித்த நபர்/பெண் ஐகான் இருக்கிறார்களா?

அஹிலா: இறைவனடிச் சேர்ந்த என் பாட்டி, சரோஜினி மற்றும் என் அம்மா, திருமதி ஷாமலா. என் பாட்டி ஒரு தனித்து வாழும் தாயாக இருந்த போதிலும் அதைக் காரணம் காட்டாமல் தன் பேரக்குழந்தைகளை வளர்ப்பதிலும், அவர்களிடம் சிறந்த நற்பண்புகளை விதைப்பதிலும் முக்கியத்துவம் செலுத்தினார். என் அம்மா எப்போதும் வழக்கத்திற்கு மாறான நபர். தன் வாழ்நாள் முழுவதும் ஒரு வணிகப் பெண்மனியாக இருந்ததால், சுயாதீனமாகவும் உணர்ச்சி ரீதியாகவும் வலுவாக இருக்க எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக என் அம்மா இருந்தார்.

ரேவதி: என் அம்மா, வேலு மங்கை நாச்சியார், ஜான்சி ராணி என்றுச் சொல்வேன்.

  1. சர்வதேச மகளிர் தின வாழ்த்து/செய்தியை உங்களின் இரசிகர்களுக்குப் பகிரவும்.

அஹிலா: அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். பிறர் நம்மை இழிவுப் படுத்த விடாமல், சகப் பெண்களை இழிவுபடுத்தும் போது அவர்களுக்கு ஆதரவாக நிற்போம்.

ரேவதி: அனைவரையும் சமமாக நடத்துங்கள் மற்றும் அனைத்துப் பெண்களையும் அரவணைத்துச் செல்லுங்கள். அவர்களின் திறமையைத் தட்டிக் கொடுங்கள். நாம் வீழ்வதற்காகப் பிறக்கவில்லை, வாழப் பிறந்துள்ளோம், சரித்திரம் படைப்போம் வாரீர்!