Home No FB செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – தாள் 2 –...

செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – தாள் 2 – செய்யுள் (பகுதி 1)

907
0
SHARE
Ad

செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – தாள் 2 – செய்யுள் (பகுதி 1) 
Selliyal Video : SPM Tamil 2022 – Exam Guide – Paper 2 – Poem (Part 1)

மார்ச் 28-ஆம் தேதி (2022) நடைபெறவிருக்கும் எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வை  எழுதவிருக்கும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு செல்லியல் வழங்கி வரும் சிறப்பு காணொலிகளின் வரிசையில் தாள்-2க்கான செய்யுள் பகுதி குறித்த விளக்கங்களை இந்தப் புதிய காணொலியில் வழங்குகிறோம்.

செய்யுள் பகுதிக்கான இந்த முதல் பகுதி காணொலியில், எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் தாள் 2 – செய்யுள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகைகளை மாணவர்களுக்கு திருமதி சா.விக்னேசுவரி விளக்குகிறார்.

#TamilSchoolmychoice

எஸ்பிஎம் தமிழ்மொழி பாடத்திற்கு மாணவர்களைத் தயார் செய்வதில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற விக்னேசுவரி, வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” என்ற நூலின் ஆசிரியருமாவார்.

5 மாதிரி தேர்வுத் தாள்கள், அவற்றுக்கான பொருத்தமான விடைகள், 9 மாதிரிக் கட்டுரைகள், தமிழ் இலக்கண விளக்கம், தேர்வுக்கான சில ஆலோசனைகள் ஆகியவற்றை இந்த நூல் உள்ளடக்கியிருக்கிறது.