Home நாடு மலாக்கா கல்வி இலாகா ஏற்பாட்டில், கிருஷ்ணபலராம் இந்திய கலை கலாச்சார மையத்தின் ஒத்துழைப்புடன் ‘செந்தமிழ் விழா’

மலாக்கா கல்வி இலாகா ஏற்பாட்டில், கிருஷ்ணபலராம் இந்திய கலை கலாச்சார மையத்தின் ஒத்துழைப்புடன் ‘செந்தமிழ் விழா’

1242
0
SHARE
Ad

கடந்த வாரம்  ஆகஸ்ட் 4-ஆம் திகதி வியாழக்கிழமை ஆடிட்டோரியம் கெபுடாயயான் டான் கெசெனியான் நெகாரா என்ற இடத்தில் (Auditorium Kebudayaan & Keseniaan Negara) செந்தமிழ் விழா என்னும் நிகழ்ச்சி மலாக்கா மாநில கல்வி இலாகா ஏற்பாட்டில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்ச்சிக்கு மலாக்கா மாநிலத்தில் இயங்கும் கிருஷ்ணபலராம் இந்திய கலை கலாச்சார மையம் முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், இடைநிலைப்பள்ளி இந்திய முதல்வர்கள் ஆசிரியர்கள், பொது இயக்கத்தின் தலைவர்கள், பெற்றோர்கள் போட்டிகளில் வெற்ற பெற்ற மாணவர்கள் உட்பட 350 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டான்ஶ்ரீ எஸ்.சுப்ரமணியம் கலந்துகொண்டார். மலாக்கா மாநிலக் கல்வி இலாகாவின் (Jabatan Pendidikan Negeri Malacca) தமிழ்பிரிவின் உதவி இயக்குனர் திரு சி. முருகையா மற்றும் மலாய் மொழி பிரிவுக்கான உதவி இயக்குனரும் கல்வித்துறையிலிருந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#TamilSchoolmychoice

கடந்த 22 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் இந்த செந்தமிழ் விழாவை மலாக்கா கிருஷ்ணபகலராம் இந்திய கலை கலாச்சார இயக்கத்தின் சார்பில் அதற்கான முழு செலவையும் ஏற்று டிஎஸ்கே. நாகேந்திர ராவ் குமாரராவ் – விஜயா நாச்சியப்பன் தம்பதியினர் நடத்தி வருகின்றனர்.

நிகழ்ச்சியின் முதல் அங்கமாக செந்தமிழ் விழா நடத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டதற்கான பரிசளிப்பு விழா இடம் பெற்றது. தமிழ்பள்ளிகளுக்கு 4 போட்டிகளும், தேசிய ஆரம்பபள்ளிகளுக்கு 1 போட்டி, மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கு 7 போட்டிகளுமாக தனித்தனிப் பிரிவாக போட்டிகள் நடத்தி 12 போட்டிகளில் – 120 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இரண்டாவது அங்கமாக மலாக்காவில் தமிழ்க் கல்விக்கும் இந்திய மாணவர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பல ஆண்டுகளாக பல வகைகளிலும் சேவை செய்தவர்களை அடையாளங்கண்டு டான்ஶ்ரீ சுப்ரமணியம் தலைமையில் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டத்தோ கருப்பன் தம்பதியினர், டத்தோ சுப்பிரமணியம் தம்பதியினர், டத்தோ டாக்டர் சுவாமிநாதன் தம்பதியினர் மற்றும் திரு கிருஷ்ணராஜன் தம்பதியினர் தங்களின் சிறந்த சேவைக்காக கௌரவிக்கப்பட்டார்கள்.

டான்ஸ்ரீ சுப்ராவுடன் நாகேந்திர ராவ்

மூன்றாவது அங்கமாக மூன்றாம் படிவ மாணவர்களுக்கான பிடி3 தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மலாக்கா மாநிலம் முழுவதும் உள்ள 34 இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் பிடி 3 தேர்வுக்கான வழிகாட்டி பயிற்சி நூல் – 450 புத்தகங்கள் – மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. திருமதி சா.விக்னேஸ்வரி உருவாக்கியிருந்த இந்த நூலை வி ஷைன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

மதிய உணவோடு 1 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு தேநீர் விருந்துடன்  நிறைவடைந்தது.