Home உலகம் சிங்கப்பூர், ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி – இனி குற்றமாகக் கருதப்படாது!

சிங்கப்பூர், ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி – இனி குற்றமாகக் கருதப்படாது!

530
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆணும் ஆணும் இணை சேரும் ஓரினச் சேர்க்கை இனிமேல் சிங்கப்பூரில் குற்றமாகக் கருதப்படாது என்றும் அதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.

எனினும் எப்போது இந்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.

இந்த சட்டத் திருத்தங்கள் மாறிவரும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன என்றும் லீ தெரிவித்தார். எனினும் திருமணம் என்ற பந்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது என்பதை சிங்கப்பூர் தொடர்ந்து அங்கீகரிக்கும் – அதில் மாற்றமில்லை – என்றும் லீ மேலும் தெரிவித்தார்.