Home நாடு எல்சிஎஸ் ஊழல் : ரபிசி ரம்லி பெயர்குறிப்பிடப்போகும் ‘பெரும் முதலை’ யார்?

எல்சிஎஸ் ஊழல் : ரபிசி ரம்லி பெயர்குறிப்பிடப்போகும் ‘பெரும் முதலை’ யார்?

464
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் எல்சிஎஸ் போர்க்கப்பல் ஊழல் விவகாரத்தில் பெரும் முதலை ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் அவர் யார் என்பதை ஆதாரங்களுடன் நாளை திங்கட்கிழமை வெளியிடுவேன் என்றும் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லி அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த ‘பெரும் முதலை’ யாராக இருக்கும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

எல்சிஎஸ் ஊழல் வழக்கு

அரச மலேசியக் கடற்படைக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து போர்க்கப்பல்கள் வாங்கிய விவகாரத்தில் மில்லியன் கணக்கான ரிங்கிட் ஊழல் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பில் முன்னாள் மலேசியக் கடற்படைத் தலைவர் டான்ஸ்ரீ அகமட் ரம்லி முகமது மீது மூன்று குற்றவியல் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் ஏற்கனவே சுமத்தப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அகமட் ரம்லி அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியிருக்கிறார்.

78 வயதான அகமட் ரம்லி போஸ்டீட் நேவல் ஷிப்யார்ட் என்ற நிறுவனத்தின் (Boustead Naval Shipyard Sdn Bhd) முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆவார். அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் உடன்பாடு இல்லாமல் 21.08 மில்லியன் ரிங்கிட் செலுத்துவதற்கு அவர் ஒப்புதல் அளித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

செட்டாரியா ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சுமார் 13 மில்லியன் செலுத்துவது தொடர்பான முடிவு போஸ்டீட் நிறுவன வாரியத்தின் அனுமதி இல்லாமல் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.