Home No FB செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – இலக்கணம் (பகுதி 2)

செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – இலக்கணம் (பகுதி 2)

1835
0
SHARE
Ad

செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – இலக்கணம் (பகுதி 2) 
Selliyal Video : SPM Tamil 2022 – Exam Guide – Paper 2 – Grammar (Part – 2)

மார்ச் 28-ஆம் தேதி (2022) நடைபெறவிருக்கும் எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வை  எழுதவிருக்கும் மாணவர்கள்  மீள்பார்வை செய்ய உதவும் பொருட்டு செல்லியல் வழங்கி வரும் சிறப்பு காணொலிகளின் வரிசையில் தாள்-2க்கான இலக்கணம் (பகுதி 2) குறித்த விளக்கங்களை இரண்டாவது பகுதியாக இந்தக் காணொலியில் வழங்குகிறோம்.

இந்த 2-வது பகுதி காணொலியில், எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி இலக்கணம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகைகளை மாணவர்களுக்கு திருமதி சா.விக்னேசுவரி விளக்குகிறார்.

#TamilSchoolmychoice

எஸ்பிஎம் தமிழ்மொழி பாடத்திற்கு மாணவர்களைத் தயார் செய்வதில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற விக்னேசுவரி, வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” என்ற நூலின் ஆசிரியருமாவார்.

5 மாதிரி தேர்வுத் தாள்கள், அவற்றுக்கான பொருத்தமான விடைகள், 9 மாதிரிக் கட்டுரைகள், தமிழ் இலக்கண விளக்கம், தேர்வுக்கான சில ஆலோசனைகள் ஆகியவற்றை இந்த நூல் உள்ளடக்கியிருக்கிறது.