Home கலை உலகம் ஆஸ்ட்ரோ விண்மீன் : ‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’ – உள்ளூர் தமிழ் பயணத் தொடர்...

ஆஸ்ட்ரோ விண்மீன் : ‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’ – உள்ளூர் தமிழ் பயணத் தொடர் முதல் ஒளிபரப்பு

676
0
SHARE
Ad


  • ‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’ எனும் உள்ளூர் தமிழ் பயணத் தொடர் ஏப்ரல் 20 முதல் ஆஸ்ட்ரோ விண்மீனில் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் காணுகிறது

கோலாலம்பூர்: ஏப்ரல் 20 முதல் இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு எனும் உள்ளூர் தமிழ் பயணத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

மலேசியர்கள் உற்சாகமாகத் தங்களின் பயணத் திட்டங்களைத் தொடங்கவிருக்கும் தருணத்தில், பல்வேறு உள்ளூர் சுற்றுலாத் தலங்களைக் குறைந்தப் பட்ஜெட்டில் எப்படிச் சுற்றிப் பார்த்து அனுபவிக்கலாம் என்பது பற்றிய நுண்ணறிவுகளை ‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’ இரசிகர்களுக்கு வழங்கும்.

#TamilSchoolmychoice

புலாவ் தியோமான், தைப்பிங், பினாங்கு, மலாக்கா, புலாவ் பெர்ஹென்டியான், கோத்தா பாரு, ஈப்போ, அலோர் ஸ்டார், புலாவ் பங்கோர், ஜோகூர் பாரு, கேமரன் மலை, லங்காவி மற்றும் தாமான் நெகாரா உள்ளிட்டப் பிரபலமான உள்ளூர் சுற்றுலாத் தலங்களை இந்தத் தொடர் சித்தரிக்கும்.

பிரபலமான உள்ளூர் ராப்பரும் தயாரிப்பாளருமான ரெபிட் மேக் தொகுத்து வழங்கும் இந்த 13-அத்தியாயத் தொடர், ஒவ்வொரு சுற்றுலாத் தலத்திலும் கிடைக்கப்பெறும் மலிவானத் தங்குமிடம், உணவு, நினைவுப் பொருட்கள் மற்றும் பலவற்றைப் பற்றியத் தகவல்களைச் சித்தரிக்கும்.

கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு – தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு புதன், இரவு 9.30 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டுக் களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.