கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன், நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 21) மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டியை இந்தியத் தூதரக அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சென்று கண்டார்.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தொழிலாளர் பரிமாற்றம் தொடர்பான பொதுவான அம்சங்கள், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு தொழிலாளர்களைத் தருவிப்பது ஆகியவை குறித்து இந்தியத் தூதரும் சரவணனும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு குறித்து இந்தியத் தூதரிடம் சரவணன் இந்தச் சந்திப்பின்போது விளக்கினார். அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மலேசியாவுக்கும் வரும் அந்நியத் தொழிலாளர்களின் வருகையை ஒழுங்குபடுத்தும், ஒருமுகப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் சரவணன் இந்தியத் தூதருக்கு விளக்கமளித்தார்.
தனது சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாகவும் சரவணன் தெரிவித்தார்.