ஞான சைமன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவர்

    776
    0
    SHARE
    Ad
    புதிய செயற்குழுவினருடன் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான சைமன்

    கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அடுத்த ஈராண்டுத் தவணைக்கு ஞான சைமன் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் தலைமையில் புதிய செயற்குழுவினரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இரண்டு வாரங்களுக்கு முன்னர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.

    கடந்த தவணைக்கான செயற்குழுவில் ஞானசைமன் சங்கத்தின் பொருளாளராகப் பதவி வகித்தார்.

    #TamilSchoolmychoice

    சங்கத்தின் தலைவராகப் பதவி விலகிச் செல்லும் பெ.இராஜேந்திரன், சங்கத்தின் அயலகப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.