Home உலகம் இலங்கையின் புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா பதவியேற்கலாம்

இலங்கையின் புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா பதவியேற்கலாம்

620
0
SHARE
Ad

கொழும்பு : திவாலான நிலைமைக்கு ஆளாகியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பதவியேற்க வாய்ப்புள்ளதாக இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித்தின் தந்தையார் பிரேமதாசாவும் இலங்கையின் முன்னாள் பிரதமராவார்.

நடப்பு அதிபர் கோத்தாபாய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாசாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த அழைப்பு குறித்து சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் கலந்தாலோசிக்கவுள்ளார்.

நடப்பு பிரதமரும், அதிபர் கோத்தாபாயவின் சகோதரருமான மகிந்த ராஜபக்ச, நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பு அலைகள் காரணமாக, விரைவில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.