Home நாடு அம்னோ சட்டவிதிகளில் மாற்றங்கள் – காலிட் நோர்டின் முன்மொழிவார்

அம்னோ சட்டவிதிகளில் மாற்றங்கள் – காலிட் நோர்டின் முன்மொழிவார்

626
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த வாரம் சனிக்கிழமை (மே 14) நடைபெறவிருக்கும் சிறப்பு அம்னோ பொதுப் பேரவையில் கட்சியில் பரிந்துரைக்கப்பட்ட சட்டவிதி மாற்றங்களை அம்னோவின் உதவித் தலைவர் காலிட் நோர்டின் முன்மொழிவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் அறிவித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 6 மாதங்கள் கழித்து கட்சியின் தேர்தல்கள் நடைபெறும் என்பது அத்தகைய சட்டவிதித் திருத்தங்களுள் ஒன்றாகும்.

இந்த மாநாட்டில் சுமார் 2,666 பேராளர்கள் கலந்து கொண்டு சட்டவிதித் திருத்தங்கள் மீது வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அம்னோவின் தேர்தல்கள் ஆகக் கடைசியாக 2018-இல் நடைபெற்றன. இந்த ஆண்டுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்பாக நடைபெற்றாக வேண்டும். இதற்கிடையில் இந்த புதிய சட்டத் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அம்னோ தேர்தல்கள் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் வாய்ப்பு ஏற்படும். சங்கப் பதிவதிகாரி இந்த சட்டத் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அம்னோ எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் கட்சித் தேர்தல்களை நடத்தியாக வேண்டும்.