Home நாடு சரவணன், அமெரிக்கா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள வாஷிங்டன் பயணம்

சரவணன், அமெரிக்கா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள வாஷிங்டன் பயணம்

932
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று சனிக்கிழமை காலை (மே 7) அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணமானார்.

அங்கு மே 10 முதல் மே 13 வரை நடைபெறும் அமெரிக்கா – ஆசியான் நாடுகளுக்கிடையிலான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியின் அதிகாரத்துவக் குழுவில் சரவணனும் இடம் பெற்றுள்ளார்.

தனது பயணத்தின்போது பலவந்தத் தொழிலாளர் விவகாரம் குறித்து அமெரிக்கத் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் சரவணன் தனது பயணம் குறித்துக் கருத்துரைத்தார்.

இதே மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்புக்குப் பின்னர் பயணமாவார்.