Home அரசியல் மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சி அமையும் – லிம் குவான் எங்

மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சி அமையும் – லிம் குவான் எங்

582
0
SHARE
Ad

Lim Guan Engபினாங்கு, ஏப்ரல் 24- மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஊழலற்ற ஆட்சியை நடத்துவோம் என்று பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கூறினார்.

கடந்த பொதுத்தேர்தலில் பினாங்கு மாநிலத்தை நாங்கள் கைப்பற்றினோம். இந்த ஐந்தாண்டு காலத்தில் முடிந்தவரை ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறோம்.

மே 5ஆம் தேதி 13ஆவது பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. மாற்றத்தை ஏற்படுத்த கூடிய பொதுத் தேர்தலாக இது அமையும் என்றும், அன்றைய தினம் புதிய சரித்திரம் படைக்கும் நாளாக அமையும் என்றும் லிம் தெரிவித்தார்.