Home இந்தியா ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டார்

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டார்

619
0
SHARE
Ad

சென்னை : இங்குள்ள ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் கடந்த சனிக்கிழமை ஜூன் 11-ஆம் தேதி நடைபெற்ற நடைபெற்ற, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் முகமது ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

“ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றுப் புதுமண இணையரை வாழ்த்தினேன்.
அன்புக்குரிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது உயிரோட்டமான இசையால் எல்லைகளையும் தடைகளையும் கடந்து மேலும் பல நெஞ்சங்களை ஆற்றவும் இணைக்கவும் வாழ்த்துகிறேன்” என ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டார்.